Monday 21 June 2021

புதுக்கோட்டை யில் பொதுப் போக்குவரத்துக்கு ஏன் அனுமதி இல்லை....

 புதுக்கோட்டை யில்

பொதுப் போக்குவரத்துக்கு
ஏன் அனுமதி இல்லை....
சென்னைக்கு மட்டும் வெண்ணெய்
புதுக்கோட்டை க்கு சுண்ணாம்பா....
புதுக்கோட்டை மாவட்டத்தில்
தொற்று குறைந்ததாக
அரசு அறிவிப்பு செய்கிறபோது...
பெரும்பாலும் கடைகளை
திறக்கச் சொல்லிவிட்டு...
பொதுப் போக்குவரத்து
அனுமதிக்கவில்லை என்றால்
ஆளே இல்லாத கடைக்கு டீ ஆத்தனுமா?
வியாபாரம் எப்படி நடக்கும்
பொதுமக்கள் தேவையான பொருட்களை
எப்படி வீட்டிலிருந்தே பெறுவார்கள்...
50 சதவீத பணியாளர்களுடன்
அலுவலகங்கள் இயங்கும் என்றால்
பேருந்து போக்குவரத்து இல்லை
எனும்போது
ஆண்கள் வாகனங்களில்
பயணிப்பார்கள்.
வாகன வசதி இல்லாத பெண் ஊழியர்கள்
நிலை தர்ம சங்கடம்.
பணிக்குச் செல்ல
பஸ் வசதி இல்லை....
ஆனால் 50 சதவீதம்
பணிக்கு வந்தே ஆகணும்...
ஒரு உயர் அதிகாரி சொன்னாராம்
ஏம்மா நீங்க பறந்து வருவீங்களோ
நடந்து வருவீங்களோ...
பணிக்கு வந்தே ஆகணும் என்று
இதயத்தை கழட்டி வச்சுட்டு பேசினாராம்.
பாவம் அப்பாவி பெண் ஊழியர்கள்
புதிய அரசு கருணை காட்டி
புதுகைக்குள் பேருந்து இயக்கி
விடியல் தரப்போறாருன்னு
நம்பி வாகாகளித்த மக்களுக்கு உதவிட
பேருந்துப் போக்குவரத்தை
புதுக்கோட்டை யில் விரைந்து தொடங்கிட வேண்டுகிறோம் Kasavayl kannan

No comments:

Post a Comment