Monday 21 June 2021

ஓம் சிவாய நமஹ சிவ சிவாய நமஹ....

 ஓம் சிவாய நமஹ

சிவ சிவாய நமஹ....
தந்தை ஈசனுக்கே தந்தையர் தினம்...
தந்தைக்கெல்லாம் தந்தை அவர்...
அவர் தந்தை இல்லா தந்தை அவர்...
விந்தைக்கெல்லாம் விந்தை அவர்...
மனித சிந்தைக்கும் எட்டாத செல்வம் அவர்...
சிவம் என்ற மூன்றெழுத்தை கொண்டவரவர்...
சிந்தை தனை செழுமையாக்கும் வள்ளலவர்...
ஜோதியாக உள்ளிருக்கும் உன் ஆன்மாவை
சுடர்விடவே செய்துவிடும் சுந்தரேசர்...
அன்பாக அழைத்துப்பார்
அப்பாவென்றே...
ஆன்மாவும் குதூகலிக்கும்
மகிழ்வுடன் அன்றே...
வெள்ளை மனம் படைத்தவரின்
வீட்டில் குடியிருப்பார்...
வெகுளி உள்ளம் கொண்டவரை
கண்டே மகிழ்ச்சி கொள்வார்...
அஹிம்சை ஒன்றேதான் ஞானமென்றார்...
ஹிம்சை தருபவனே அசுரனென்றார்...
அசுர குணம் அழிந்திடவே
தன்னை நினைக்க சொன்னார்...
தேவ குணம் வளர்ந்திடவே
நினைவில் நிலைக்க சொன்னார்...
ஈசன் அப்பாவை
அறிந்தவன் தான் ஆத்திகவாதி...
அவர் ஜோதியென்றே
உணராதவன் நாத்திகவாதி...
உடலுக்கு தந்தை உலகில் ஒருவனுண்டு...
உலக உயிர்களுக்கெல்லாம் தந்தை
இறைவன் ஈசனுண்டு...
பரமாத்மா என்ற பெயர் தாங்கி
புவிக்கு வந்தார்...
உடலற்ற ஜோதியென
தன்னை உணர்த்த வந்தார்...
பிரம்மா,விஷ்ணு...சிவனல்ல...
பிரம்மா,விஷ்ணு,சங்கரனென்றே
உணர்வாய் நீ...
இம்மூவருமே ஜோதியான
தந்தை ஈசனின் குழந்தையென
அறிவாய் நீ...
ஆதி ஆந்தமில்லா அருட்பெரும் ஜோதியவர்...
எல்லைகளில்லா இனிய இன்பம் அவர்...
தந்தையர் தின நாளிலே...
தந்தை பொன்னம்பல ஜோதியை
பரமாத்மா என நீ உணர்ந்திடு...
உன் நெற்றியின் அம்பலத்தில்
உன்னை அழிவற்ற ஜோதியென
ஆன்மாவாக உணர்ந்திடு...
ஆன்மாவை எண்ணத்தில் வை...
தந்தை சிவத்தை சிந்தையில் வை...
அவர் அன்பிலே மூழ்கிவிடு...
இந்த அகிலத்திற்கும் அமைதி கொடு...
இதுவே தந்தை ஈசனின்
கட்டளை என உணர்ந்துவிடு...
இந்த தந்தையர் தினத்தில்
அதை நீ செயல்படுத்து....
சரணம் சரணம்
மகேஷ்வரா .....

No comments:

Post a Comment