Thursday 28 February 2019

இந்திய ராணுவத்தின் மனிதாபிமானம்..

இந்திய ராணுவத்தின் மனிதாபிமானம்..
அபிநந்தனை மரியாதையா நடத்தி அவர மத்தவங்க கிட்ட இருந்து காப்பாத்தியிருக்க பாகிஸ்தான் இராணுவத்தினர் ஒழுக்கத்தை இந்தியா கற்றுக்கொள்ளவேண்டும்.
இதுவே பாகிஸ்தான் இராணுவ வீரன் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டிருந்தால் அவனை என்ன பாடுபடுத்தியிருக்கும் இந்தியா..?
இப்படிக்கு அந்த நாட்டின் சமாதான தூதுவர்கள்.
இந்தியா பிரான்ச்.
வரலாறு தெரியாத கோமாளிகளே..!
ஒரு பாகிஸ்தான் வீரனல்ல 90,000 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள், அதுவும் இராணுவ தளபதியுடன் பங்களாதேஷ் போரில் இந்திய இராணுவத்திடம் சரணடைந்து, உயிருடன் பத்திரமாக மரியாதையுடன் பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதுமட்டுமல்ல கார்கில் போரில் கொல்லபட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உடலை அந்நாடு வாங்கமறுத்து, இவர்கள் யாரென்றே தெரியவில்லை என்று கைவிரித்துவிட்டது.
காரணம் மானப்பிரச்சனையாம்.
ஆனால் இந்தியா என்ன செய்தது தெரியுமா..?
அவர்கள் அனைவரும் இந்தியாவிலேயே
அவர்கள் மத முறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு , இந்த மண்ணில் புதைக்கப்பட்டனர்.
அதுவும் எப்படி..?
அவர்கள் உடலில் பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டு இராணுவ மரியாதை செய்யப்பட்டு, இங்கே அடக்கம் செய்யப்பட்டனர்.
உலகத்துக்கே கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு, ஒழுக்கம் கத்துக்கொடுத்த தேசத்துக்காடா ஒழுக்கபாடம் நடத்துறீங்க...?
வரலாறு தெரியாத கோமாளிகளா.
நெல்லை ஜவகர்
-Ashok Ranjit

No comments:

Post a Comment