Wednesday 27 February 2019

கவிஞர் அரிமழம் ப.செல்லப்பாவின் கருத்து..

கவிஞர் அரிமழம் ப.செல்லப்பாவின் கருத்து..
நாளும் ஒரு நற்கருத்து!(27-02-2019)புதன்கிழமை!
அடக்கம் வெல்லும்!அதிகாரம் கொல்லும்!
மிக உயர்ந்த பதவியை அடைந்தவர்கள்,தாங்கள்கடைபிடித்தஅடக்கத்தாலும், அடுத்தவர் மீது காட்டியஇரக்கத்தாலும் தங்களின்பதவிக்குபெருமை சேர்த்தவர்கள்!மக்களின்இதயங்களில்வாழ்ந்தவர்கள்.மக்களும்அத்தகையதலைவர்களைமறக்காமல்போற்றி,தங்களதுவழிகாட்டிகளாகஏற்றுக்கொண்டனர்.அந்தவகையில்வாழ்ந்தவர்கள்உத்தமர்காந்தியடிகள்அமெரிக்காவின் அதிபராக இருந்த ஆபிரகாம்லிங்கன்!இந்தியாவின்குடியரசுத்தலைவராக விளங்கிய அப்துல்கலாம்தென்னாப்பிரிக்காவின்விடுதலைக்காக போராடி, அதன்அதிபராகவிளங்கியநெல்சன்மாண்டேலா!ஒரு முறை தனது பாதுகாப்புஅதிகாரியுடன்நடைபயிற்சிமேற்கொண்டார் ஆபிராகம் லிங்கன்.அவர் சென்ற வழியில்,கருப்பினத்தைச்சார்ந்தபிச்சைக்காரன் ஒருவன், ஆபிரகாம் லிங்கனைப்பார்த்தவுடன் எழுந்து நின்று பணிந்து வணக்கம் சொன்னான்.பதிலுக்கு வணக்கம் சொன்ன லிங்கன்,தான்அணிந்திருந்த தொப்பியை பிச்சைக்காரனது தலையில்அணிந்துமகிழ்ந்தார்.இதைப்பார்த்த லிங்கனின் பாதுகாப்பு அதிகாரி நீங்கள் அவன் அருகில் சென்றதும் தவறு,அவனுக்குதொப்பியை கொடுத்ததும் தவறு இதை ஏன் செய்தீர்கள்?என்று கேட்டார்.உடனே பதில் சொன்னார்ஆபிரகாம்லிங்கன் என்னைவிட பணிவுகாட்டுவதில்,அடக்கமாய் வாழ்வதில் அவன்உயர்ந்துநிற்பதாகஉணர்ந்தேன்.அதனால்கொடுத்தேன்என்றார்.பாதுகாப்பு அதிகாரி சொன்னார்பிச்சைக்காரனின்செயலைபார்த்தவுடன்நான்உத்தரவிட்டிருந்தால்அவன்தண்டனைபெற்றிருப்பான்
என்றுசொன்னார்.லிங்கன்சொன்னார்அடக்கமே என்றும் வெல்லும்!அதிகாரம் என்றும் கொல்லும்என்றார்.ஆம் நண்பர்களேஅடக்கத்தின் பெருமையை நமது குறளாசான் வள்ளுவர் நமக்குச்சொன்னது நினைவுக்குவருகிறதா?"அடக்கம் அமரருள் உய்க்கும்!"என்று.
நாளைமீண்டும்சந்திப்போமா!
தகவல்தந்தோன்
கவிஞர் அரிமழம்
ப.செல்லப்பா
9791033913
aamchennai@gmail.com

No comments:

Post a Comment