Thursday 28 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நல்லது நடக்கட்டும்...
பாகிஸ்தானிடம் விமானப்படை
கமாண்டர் அபிநந்தன் சிக்கிக்
கொண்டிருக்கிறார் என்ற தகவலை
நமது பாதுகாப்பு செயலரும் உறுதி
செய்திருக்கிறார்.
இது தொடர்பாக நம் முகநூல்
போராளிகளின் நடவடிக்கைகள்தான்
கதிகலங்க வைக்கிறது.
ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இராணுவ சேவை என்பது மிகவும்
பாதுகாப்பாக தினமும் போய் வருகின்ற
IT வேலை இல்லை. சிவிலியன்
உத்தியோகமும் இல்லை.
இராணுவத்தில் சேரும்போதே
வீட்டில் வாய்கரிசி வாங்கி பையில்
போட்டுக் கொண்டு உயிருக்கு துணிந்தே
பணியில் சேருகிறார்கள்.
யாருக்கும் எந்த சேதாரமும் ஆகாது என்று
உறுதி கொடுத்து விட்டு போகுமளவுக்கு,
இது முயல் வேட்டையில்லை. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சிங்கவேட்டை.
சில விரும்பத் தகாத இழப்புகள்
ஏற்பட்டே தீரும். அபிநந்தனா இருந்தாலும், நானா இருந்தாலும், நீங்களா இருந்தாலும்... சில தியாகங்கள செய்தே ஆகணும். விரும்பினாலும் விரும்பாட்டாலும், ராணுவத்துல சென்டிமென்டுக்கு இடமே கிடையாது.
பாகிஸ்தானை பொறுத்தவரை... அவனோட மூலதனமான ; கோடிக்கணக்குல கொட்டி ட்ரெயின் பண்ணின நூத்துகணக்கான பயங்கரவாதிகள் மற்றும் கோடிகணக்கான மதிப்புள்ள ஆயுதங்கள இழந்தது மட்டுமில்லாம, சர்வதேச அரங்கத்துல தலைகுனிஞ்சு நிக்கறான். ஏற்கனவே காட்டுமிராண்டி குணம், இதுல... ரெண்டுநாளா அடிபட்ட புலிமாதிரி, காயம்பட்ட கால நக்கிட்டு உக்காந்திருக்கான். 'இந்தியன்' ன்னு சொல்லி, கைல எவன் கிடைச்சாலும்... அசுரத்தனமா வேட்டையாடவே செய்வான். இந்த விஷயத்துல அதிரடி எல்லாம் வேலைக்கு ஆவாது. தூதரக ரீதியான பேச்சு மட்டுமே பலன் கொடுக்கும். சீனாவின் எச்சரிக்கைக்கு பிறகு, "போருக்கு விருப்பமில்லை"னு, பாக் குடுத்த அறிக்கைய பாக்கும்போது, 'இந்தியாவை பழிவாங்கும் அளவுக்கு எங்களுக்கு பலமில்லை. பாலகோட் தாக்குதலால், எங்களுக்கு ஏற்பட்ட அவமானம் துடைக்கப்பட்டால்... அதுவே போதும். இந்தியவிமானி எங்களிடம் பிடிபட்டதே கூட, எங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கப் போதுமானது' ன்னு நினைச்சு, பாக் பின்வாங்குறது தெரியுது. அதனால, அபிநந்தன உயிரோட ஒப்படைப்பாங்கன்னு தோணுது.
மத்தபடி இம்ரான்கான்... மொத்த பாக் விமான நிலையங்கள மூடி, ரெட்அலர்ட் குடுக்குறதும்... அணுஆயுத ஆலோசகர்கள் கூட மீட்டிங் போடுற தெல்லாம், "சீக்கிரமா வந்து பஞ்சாயத்த முடிச்சு விடுங்கைய்யா. எங்க ஆளுங்க முன்னூறு நானூறுபேர கொன்னும் கூட, அந்தாளு வெறி அடங்காம திரியுறான். இத லேசுல விடமாட்டான் போலிருக்கு. இதுக்குமேல இனி நேரடியா இந்தியாவோட கால்ல விழுந்தா... சொந்த நாட்டுக்குள்ள நடமாட முடியாம, மானம் கப்பலேறிடும்" ன்னு, உலக நாடுகளுக்கு சிக்னல் குடுத்து பாவ்லா காட்டுறவேலை. ஏன்னா... இத்தன வருஷமா, வழக்கமா இதுதான் நடந்துகிட்டு இருந்தது. இப்ப நடக்குறதுதான்... பாகிஸ்தானுக்கு புதுசு.
மோடியும்... அவ்வளவு லேசில் ஒரு ஜவானை கைவிடமாட்டார். முழு நம்பிக்கை இருக்கு !!! 

No comments:

Post a Comment