Wednesday 27 February 2019

முதல் அடிக்கே அலறல் ஆரம்பம்....

முதல் அடிக்கே அலறல் ஆரம்பம்....
பாகிஸ்தானை ஆக்கிரமிக்கும் முயற்சியி்ல் இந்தியா ஈடுபடுகிறது..பாகிஸ்தான் அலரல்..
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.
இதில் பாலாகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
விமானப்படை தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் அரசுக்கு நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் முப்படை தளபதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் இந்திய விமானப்படையின் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் குரேஷி கூறியதாவது:
‘‘பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியது எங்கள் நாட்டின் இறையான்மையை மதிக்காத செயல். பாகிஸ்தானை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. இதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் முறையிடுவோம். எங்களுக்கு ஆதரவான நாடுகளை அணி திரட்டுவோம். இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்’’ எனக் கூறியுள்ளான்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment