Friday 22 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இறைவன் கொடுத்த வரம்......
கெட்டவர்கள் என்று யாரையும் நமது மதம் தள்ளிவிடவில்லை…
அவர்களையெல்லாம் நல்வழிப்படுத்திக் கொண்டு தனக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கின்றது.
மிகச்சிறந்த தத்துவங்களைக் கொண்ட சமயத்தின் வழிவந்தவர்கள் நாம். அந்த சமயத்தைப் பின்பற்றிய பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள் நாம் என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரமாகும்.
நமது இந்து மதம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சில நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டதே தவிர இரத்த ஆறு ஓடுகின்ற அல்லது வன்மத்தை நடைமுறைப்படுத்துகின்ற ஒரு மதமாக இருந்திடவில்லை.
நாம் மற்றைய மதங்களை மதிக்கின்ற அதே நேரத்தில் நமது மதத்தை மற்றவர்கள் குறைத்து நினைக்காத வகையில் மிகவும் சாத்வீக முறையில் மற்றையவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.
நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்திலே மதச் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றுகின்ற சுதந்திரம் என்பன சொல்லப்பட்டிருக்கின்றன. யாரும் வலிந்து மதங்களை ஊட்ட வேண்டிய அவசியமில்லை.
இந்து மதத்தைப் பொருத்தவரையில் இந்து மதம் யாருக்கும் மதத்தை ஊட்டுவது கிடையாது. மதம் மாற்றம் செய்வதற்கான எந்தவொரு சடங்கும் நம்முடைய மதத்தில் இல்லை என்பதே எல்லோரும் இந்துவாகத்தான் பிறக்கின்றார்கள் என்ற உண்மையைத் தான் சொல்லுகின்றது.
மதம் மாற்றும் நிகழ்வுகளைச் செய்கின்றவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லுகின்றேன். இது சர்ச்சைக்காக அல்ல பொதுவாகச் சொல்லுகின்றேன். நீங்கள் யாராகவோ பிறந்த ஒரு பிள்ளையை யாராகவோ மாற்றுகின்றீர்கள்.
நாங்கள் மாற்றாமல் அப்படியே வைத்திருக்கின்றோம், அதுதான் எங்கள் மதத்தின் சிறப்பு. இதனால் யாரையும் இழிவுபடுத்துவது என்றல்ல மாற்று மத நண்பர்கள் இந்த விஷயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும். உங்களது பிரசாரங்களைக் கேட்டு அவர்கள் வந்தால் வரட்டும்.
எமது மதத்தின் ஆன்மீகச் சிந்தனைகளைக் கேட்டு, எமது மதத்தை உணர்ந்து எமது மதத்தைப் பின்பற்றிய பல பிற மதத்தவர்கள் உண்டு.
நமது புராணங்கள் சொல்லுகின்ற கதைகளை கதைகளாக மாத்திரம் எடுத்துக் கொள்ளாமல் கருத்துக்களாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் பல தத்துவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றது.
நமது புராணங்களில் இறைவன் அசுரர்களை வதைக்கின்றார் என்றால் அது அவர்களைக் கொலை செய்வதாக அர்த்தமில்லை அவர்களுள் இருக்கும் கொடூர குணங்களை அழிப்பதாகவும், அவர்களை நல்வழிப்படுத்துவதாகவுமே பொருள்.
கெட்டவர்கள் என்று யாரையும் நமது மதம் தள்ளிவிடவில்லை அவர்களையெல்லாம் நல்வழிப்படுத்திக் கொண்டு தனக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கின்றது.
நமது இந்து மதத்தின் தத்துவம் படிக்கப் படிக்க, ஆராய ஆராய மிகச் சிறந்த தத்துவமாகவும் உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் தாய் மதமாகவும் விளங்குகின்றது. இதற்கு சிக்காக்கோவில் இடம்பெற்ற சுவாமி விவேகாநந்தரின் உரையை விட சிறந்த உதாரணம் தேவையில்லை. அத்தகைய மிகச்சிறந்த தத்துவங்களைக் கொண்ட சமயத்தின் வழிவந்தவர்கள் நாம். அந்த சமயத்தைப் பின்பற்றிய பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள் என்பது எமக்கு இறைவன் கொடுத்த வரம். அது மிகப் பெரிய பாக்கியம்.
அந்தப் பாக்கியத்தைப் பெற்று சிறந்த பண்பாட்டோடு வளரும் நாம் நமது தனித்துவத்தையும் பேண வேண்டும் என்கின்ற பிடிவாதம் இருக்க வேண்டும். அதிலிருந்து நாம் அசைந்து கொடுக்கக் கூடாது. நமது மொழி, நமது மதம், நமது நாடு என்கின்ற விஷயங்களிலெல்லாம் விட்டுக் கொடுப்பில்லாமல் சாத்வீக குணத்துடன் செயற்பட வேண்டும்..
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment