Wednesday 27 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உண்மையான ராணுவ குடும்பம் பதறவே பதறாது..
கடைசிவரை ராணுவ சீரூடை என தனிப்பெருமை தரும் பீல்ட் மார்ஷல் என்ற அந்தஸ்த்தை இந்தியா வில்,பெற்றவர் ராணுவ தளபதியாக திகழ்ந்த கரியப்பா..
இவரது மகன் நந்தா.. 1965 பாகிஸ்தான் போரின் போது விமானப்படையில் பணியாற்றினார்.துரதிஷ்டவசமாக எதிரிகளிடம் பிடிபட்டுவிட்டார்.
பாகிஸ்தான்.தளபதி அயூப்கான், நந்தாவை அடையா ளம் கண்டுகொண்டதால் உடனே கரியப்பாவை தொடர்பு கொண்டார்..
சுதந்திரந்திற்கு முந்தைய ஒன்றுபட்ட இந்தியாவில்,
ராணுவத்தில் கரியாப்புவுக்கு கீழே பணி புரிந்தவர் அயூப்கான்..
அந்த விசுவாசத்தில், நந்தாவை நல்ல முறையில் வைத்திருந்து விடுதலை செய்வதாக சொன்னார்..
ஆனால் கரியாப்பா சொன்ன பதில்...
அதெல்லாம் தேவையில்லை. மற்ற போர் கைதிக ளைப்போலவே அவனை நடத்துங்கள்..நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அவன் உயிரை பற்றி கவலை யில்லை.அவனை மட்டுமல்ல, எல்லோரையும் விடுதலை செய்வதாக இருந்தால் விடுதலை செய்யுங்கள்.. இல்லையென்றால் எதுவுமே வேண்டாம்.. என்பதுதான்..
இந்திய ராணுவத்தினர் பலரும் அடிக்கடி பெருமையோ டு சொல்லி மார்தட்டிக்கொள்ளும் சம்பவம் இது..
ஒவ்வொரு போர் விமானமும் மேலே கிளம்பும்போது பைலட்டுக்கு வைக்கப்படும் சல்யூட், கிட்டத்தட்ட இறுதி சல்யூட் என்றே சொல்வார்கள்..
ஒரு ஜனநாயக நாட்டின் நன்மைக்கு என,வீர மரணத் திற்காக அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்கு எதுவுமே பெரிய விஷயமல்ல..
''யுத்த களத்தில் கருணை காட்டுவது என்பது செத்தவன் வீட்டில் சிரித்து மகிழ்வது போல..''
1948 எம்ஜிஆர் நடித்த அபிமன்யூ படத்திற்கு கலைஞர் எழுதிய மேற்படி வசனம்..ஞாபகத்திற்கு வருகிறது..
( பாவம், அந்த பட டைட்டிலில் கலைஞர் பெயர் வராது)
நமக்கு தோன்றியது இவ்வளவுதான்..

No comments:

Post a Comment