Friday 22 February 2019

ஐ.நா.,வில் பாக்.,க்கு எதிரான இந்தியாவின் தீர்மானம் நிறைவேற்றம்...

ஐ.நா.,வில் பாக்.,க்கு எதிரான இந்தியாவின் தீர்மானம் நிறைவேற்றம்...
புல்வாமா தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்.,14 அன்று சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவும், அதற்கு சதித்திட்டம் தீட்டியவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்காகவும் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா உள்ளிட்ட 15 நாடுகளின் கூட்டமைப்பான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை தண்டிக்கவும் ஐநா.பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சமாதானம், அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் விளங்குவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயல்கள் நியாயப்படுத்த முடியாதவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையை தொடர்ந்து பாக்.,க்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது.
ஜெய்ஷ் இ முகம்மது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புக்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆதரவு அளித்ததை அடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment