Wednesday 27 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உயர்கல்வியில் தமிழகம் முன்னணி...
சர்வதேச மற்றும் தேசிய சராசரியை விட தமிழகத்தில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகம்...
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 35-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:
"தமிழக அரசு உயர் கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக மாணவர்கள் உயர் கல்வி பெறுவதில் தேசிய சராசரியை விட தமிழகம் முன்னணியில் உள்ளது.
கடந்த 2017 - 18 ஆம் ஆண்டு கணக்கின்படி தேசிய அளவில் 26.30 சதவீதம் மாணவர்களும், 25.40 சதவீதம் பெண்களும் உயர் கல்வியைப் பெறுகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் 49.10 சதவீத ஆண்களும், 48.20 சதவீத பெண்களும் உயர் கல்வி பெறுகின்றனர். அதேபோல் தேசிய அளவில் தாழ்த்தப்பட்டவர்கள் 21.80 சதவீதமும், பழங்குடியினரில் 15.90 சதவீதம் பேர் மட்டுமே உயர் கல்வி பெறும் நிலையில், தமிழ்நாட்டில் 42.10 சதவீத தாழ்த்தப்பட்டவர்களும், 40.50 சதவீத பழங்குடியினரும் கல்வி பெறுகின்றனர்.
தேசிய அளவில் ஒட்டு மொத்தமாக 25.80 சதவீதம் பேரே உயர் கல்வி பெறுகின்றனர். இதை வரும் 2020-க்குள் 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், சர்வதேச சராசரி கூட 36 சதவீதமாக உள்ளது. ஆனால், தேசிய மற்றும் சர்வதேச சராசரியை விட தமிழகத்தில் 48.60 சதவீதம் பேர் உயர் கல்வி பெறுகின்றனர்" என்றார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment