Thursday 28 February 2019

#அபினந்தா உனக்கு அபிநந்தனம்....! எங்கள் அகம் நிறைத்தவனே

#அபினந்தா உனக்கு அபிநந்தனம்....!
எங்கள் அகம் நிறைத்தவனே
கருப்பு கண்ணாடியும்,
மஞ்சள் சால்வையும்,
கம்பீர தமிழும்,
இருந்திருந்தால் உன்
வீரம் பாடியிருக்கும்..!
கம்பீரத்தின் மொத்த உருவமே
அஞ்சாத உன் முகம் காட்டியது
இந்தியாவின் முகம்..
எங்கள் சிந்தை நிறைந்தவனே
சிறுநரிகளிடம்
சிக்கிவிட்டோமே
என எண்ணாதே
சிங்கத்தை சிறுநரிகள்
என்ன செய்யும்..!
சிறு பயமுமின்றி
நெஞ்சை நிமிர்த்தி நீ
நடந்த நடை சொன்னது
சிங்கத்தின் நடை என்று..!
இந்தியன் நடை இப்படித்தான்
என நானிலம் அறிந்தது...!
உனை அழைத்து செல்லவில்லை
இழுத்து செல்லுகிறார்கள் என
உலகம் அறிந்தது..!
கட்ட பொம்மனும்
இப்படித்தான் நடந்திருப்பான் என
உனை பார்த்து அறிந்தோம்..!
#புறநானூற்று வீரனை
புத்தகத்தின் பக்கங்களில் கண்டோம்
இன்று கண்டுவிட்டோம்..!
சகோதர சண்டையில்
சரிந்தவர்கள் இனம் பேசலாம்
இங்கே இனம் பேச்சில்லை உனக்காக
இந்தியனின் சுவாசம் பேசும்..!
உன் உயிர் பாகிஸ்தானிடம் இல்லை
பாகிஸ்தானின் உயிர்
உன்னிடம் மட்டுமே உள்ளது..!
இந்தியனின்
நாட்டுப்பற்றை
நாடு அறிந்தது
பாரத மாதாவின் தவப் புதல்வனே
உறங்க மனமின்றி
வாஞ்சையுடன் உனை
வரவேற்க காத்திருக்கிறோம்...!
பல்லாவரம் சம்பத்

No comments:

Post a Comment