Thursday 21 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பயங்கரவாதிகளின் சொர்க்கம் பாகிஸ்தான்..
ஒரேநாளில் சுதந்திரம் பெற்றவை இந்தியாவும் பாகிஸ்தானும். இந்தியா நிலவுக்கு ஆட்களை அனுப்ப திட்டமிடுகிறது. பாகிஸ்தான் பிற நாடுகளுக்கு பயங்கரவாதிகளை அனுப்புகிறது.
இந்தியா மட்டுமின்றி ஈரான் உள்ளிட்ட சில அரபு நாடுகளும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானை பொறுத்தவரை எந்த அரசு அமைந்தாலும் அவர்களால் ராணுவத்தையும், அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யையும் மீறி செயல்படமுடியாது.
தற்போதைய பிரதமர் இம்ரான்கான் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியாவின் முன்னேற் றத்தை சுட்டிக்காட்டி, பாகிஸ்தானையும் அதுபோல மாற்றுவேன் என குறிப்பிட்டார்.
ஆனால், அவரால் அது போன்று செயல்பட முடியவில்லை. ராணுவத்தின் ஆதரவுடன்தான் அவர் அரியணையில் இருக்கிறார். எனவே அவர்கள் கைப்பாவையாக பொம்மலாட்டம் ஆடுகிறார்.
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்--இ-முகம்மது (ஜெ.இ.எம்) இயக்கம் காரணம் என்பதற்கான ஆதாரத்தை இந்தியா தரவில்லை என அவர் பேசியதை கேட்ட உலகம் அவரின் நிலையை எண்ணி வருத்தப்படவே செய்தது. காரணம், நாங்கள் தான் செய்தோம்' என வீடியோ வெளியிட்டு, முறையாக அந்த இயக்கம் அறிவித்தபின்னும், இந்தியாவிடம் அவர் ஆதாரம் கேட்டது கேலிக்கூத்தானது.
முழு மெஜாரிட்டி பெற்ற அரசாக இருந்தாலும்
கூட பாகிஸ்தான் ராணுவம் நினைத்தால் அடுத்த நொடியே அரசு கவிழ்ந்துவிடும். பிரதமரும், அதிபரும் கைது செய்யப்படுவர். பாகிஸ்தான் சரித் திரத்தில் முழுமையாக பதவிக்காலத்தை பூர்த்தி செய்த அதிபர்கள், பிரதமர்கள் மிகவும் குறைவு. இயற்கை மரணம் அடைந்த தலைவர்களும் குறைவு. அந்த அளவிற்கு படுகொலைகள் அங்கு அதிகம்.
இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் ஐ.எஸ்.ஐ.யின் அதிகாரம் அங்கு கொடிகட்டி பறக்கிறது. மிக கடுமையான பொருளாதார நெருக்கடி இருக்கும் நிலையில் ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களால் உறுதியாகியுள்ளது.
இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் பாகிஸ்தானில் செயல் படும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
பாகிஸ்தானின் பகவல்பூரிலிருந்து மசூத் அசாரின் ஜெ.இ.எம்., இயங்குகிறது. பின்லேடன், மசூத் அசார் மட்டுமின்றி உலகம் முழுவதும் தேடப்படும் பயங்கரவாதிகளான கலித் ஷேக் முகமது, அபூ சுபைதா, யாசர் ஜசீரி, அபு பரஜ் அல்லிபி, ரம்ஜி பின் அல் ஷிப், உமர் பதேக் ஆகியோர் பாகிஸ்தானில் தான் பிடிபட்டனர். இது அமெரிக்காவிற்கும் ஐ.நா.விற்கும் நன்றாக தெரியும்.
அப்துல் அகமது துர்க், அப்துல் அஜீஸ் உள்ளிட்ட தலிபான்கள், எகிப்தைச் சேர்ந்த அப்த் அல்லா, ஜேசி அகமது, ஐமன் அல் ஜவாஹிரி, அல்கொய்தா உறுப்பினர் பஜீல் அதுல், ஈராக்கைச் சேர்ந்து அப்த் அல் ரஹ்மான், குவைத் பயங்கரவாதி அபோ கைத், உஸ்பெகிஸ்தான் ஐ.எஸ். பயங்கரவாதி அயூப் பஷீர் ஆகியோர் பாகிஸ்தானில்தான் வாழ்கின்றனர். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அறிக்கைபடியே உலகில் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்திருக்கும் நாடு பாகிஸ்தான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இருப்பினும் ஐ.நா. வால் எதுவும் செய்ய முடியவில்லை.
பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் இருந்தாலும் பொருளாதார ரீதியாக அதற்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த சிந்தனையே ஏற்படாமல் மழுங்கடிக்கும் விதத்தில் அங்கு தீவிர பிரசாரங்கள் நடக்கின்றன.
இளைஞர்கள் எளிதில் மூளைச்சலவை செய்ய பட்டு பயங்கரவாதி ஆக்கப்படுகின்றனர். ஆனால் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள பயங்கரவாத இயக்க தலைவர்களின் குழந்தைகள் மேற்கத்திய நாடுகளில் சுகமாக வாழ்ந்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் சிந்தனையிலும் செயல்பாட்டி லும் மாற்றம் ஏற்படாதவரை பல்லில் சிக்கிய முள்ளாகவே உலக நாடுகளுக்கு அது இருக்கும். ஆனால் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை அதற்கான வாய்ப்பு காணப்படவில்லை.
புல்வாமா தாக்குதலுக்குப்பின் உலக நாடுகளின் வற்புறுத்தல் அதிகமானதையடுத்து பயங்கர வாத தலைவர்களை தலைமறைவாக இருக்கு மாறு பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீது, ஜெ.இ.எம். தலைவர் மசூத் அசார் ஆகி யோரை சில மாதங்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment