Thursday 21 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தமிழில் பேசுவோம்
தமிழில் எழுதுவோம்......
தாய் மொழி தினம் இன்று.
வங்க தேசத்தார்
மதம் ஒன்றாயினும்
மொழியால் பிரிந்தனர்.
21 பிப்ரவரி 1952
டாக்காவில் தம்
தாய்மொழி பெங்காலிக்காக
போராடிய தினம்.
வங்க இஸ்லாமிய அறிஞர்
ஒருவர் வேண்டுகோள்
யுனெஸ்கோ வால்
ஏற்கப்பட்டு
2000 ஆண்டு முதல்
இந்த பிப்ரவரி 21
தாய்மொழி தினமாக
உலகமெங்கும்
கொண்டாடப் படுகிறது.
விவரம் இதோ
அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்கும் உரிய அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்.
இன்று, பிப்ரவரி 21,உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.
மொழி என்பது ஒரு கருவி என்று நினைப்பது தவறு.
தாய்மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், அந்த இனத்தின் சிந்தனை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வின் விழுமியங்கள் ஆகிய அனைத்தும் தாய்மொழியின் அடிப்படையிலேயே உருவாகிறது.
தாய்மொழி என்பது தாய் சொல்லித் தந்த மொழி மட்டுமல்ல தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி என்று மகாகவி பாரதி நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
தாய் மொழியின் மீதான பற்று நமக்கு இருப்பது மட்டுமல்ல நம் தலைமுறைக்கும் அதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
தாய்மொழியை தவறு இல்லாமல் பேசுவதற்கு இயலாத ஒரு தலைமுறை உருவாவது என்பது தேசத்தின்,
தேசிய உணர்வின் அவமானத்தின் அடையாளமாகும்.
பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானின் தேசிய மொழியாக உருது மொழி மட்டுமே என று அறிவித்த பிறகு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் 1952இல் மொழிக்காக போராடிய இயக்கத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக பிப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ரஃபீக்குல் இஸ்லாம் என்ற வங்க மொழி அறிஞர் வலியுறுத்திய தீர்மானத்தை 1998 ஆம் ஆண்டு முன்மொழிந்து அதனடிப்படையில் யுனஸ்கோ அமைப்பு 1999இல் நவம்பரில் அங்கீகரித்து 2000 ஆண்டிலிருந்து உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகில் கடந்த நூறு ஆண்டுகளில் வழக்கில் இருந்த 7000 மொழிகளில் தற்பொழுது 3000 மொழிகள் மட்டுமே வழக்கில் இருப்பதாக மொழியியல் ஆய்வுகள் பட்டியலிடுகிறது.
உலக வரலாற்றில் தொன்மையான 6 மொழிகள் மட்டுமே செரிவான கலாச்சாரக் கூறுகளை உள்ளடக்கியதாக கருதப்படுவதில் கிரேக்கம், இலத்தீன் இவற்றோடு நம் தாய்மொழியான தமிழ் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது என்பது பெருமைக்குரியது.
பழமைக்குப் பழமையாய் பின்னர் புதுமைக்கும் புதுமையாய் காலத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் அன்னை தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் தலைநிமிர்ந்து வாழ்த்தி வணங்குவதில் பெருமை கொள்வோம்.
எனது தாய்மொழியான
அவார் மொழி
நாளை நாளை மடியுமென்றால்
நான் இன்றே இறந்து போவேன் என்று பாடினார்
மகத்தான சோவியத் கவிஞர்
ரசூல் கம்சுதோவ்.
இயன்றவரை தமிழில் பேசுவோம் தமிழால் இணைவோம் தமிழை உயர்த்துவோம்.

No comments:

Post a Comment