Thursday 28 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லை மீறி வந்த எனிமி நாட்டு ராணுவ வீரனை தான் சிறைபிடித்து விட்டால், எந்த நாடும் முதலில் அதை வெளியே சொல்லாது..! ஏன் ...?
பாகிஸ்தான் இதைச் சொல்லாமல் இருந்தால், "எல்லை மீறி உங்கள் நாட்டிற்குள் எங்கள் ராணுவவீரர் வந்தார்.. அவரைத் திருப்பிக் கொடுங்கள்..!" என்று இந்தியாவால் கேட்க முடியாது..!
ஆனால் இப்போது ஜெனிவா ஒப்பந்தப்படி, பிடிபட்ட அபினந்தனை எப்படி நடத்த வேண்டுமோ அப்படித்தான் நடத்த வேண்டும் என்றும், திருப்பி அனுப்புமாறும் இந்தியாவால் கோர முடியும்..! காரணம்: அவர் பிடிபட்டிருப்பதை பாகிஸ்தானே சொல்லியிருக்கிறது. எனவே நம் அபினந்தன் உயிருக்கும் உடல்நலத்திற்கும் ஆபத்தில்லை..!
பயங்கரவாத பாகிஸ்தானுக்கு இது கூட தெரியாதா என்ன..? தெரியும்..! அப்புறம் ஏன் அபினந்தனை சிறைபிடித்ததைக் காட்டுகிறார்கள்..?
நண்பர்களே..! காரணத்தை நான் மனம் வருந்திச் சொல்கிறேன்...
உலகின் எந்த நாட்டிலும் நாட்டு மக்களிடையே அரசியல் வித்யாசங்கள் இருக்கும். ஆனால் , இது போன்ற சோதனை நேரங்களில், மக்கள் எல்லோருமே தம் தாய்நாட்டின் பின்னால், அரசாங்கத்தின் பின்னால், ஒற்றுமையுடன் ஆதரவாய் இருப்பார்கள்..! அதன் பெயர்தான் நாட்டுப்பற்று..!
ஆனால், இந்தியாவில் மட்டும்தான்... அதுவும் இப்போதுதான்... ஒரு கேவலம் நடந்து கொண்டிருக்கிறது..! மோடி வெறுப்பு என்பது இப்போது அரக்கத்தனமான, அசிங்கமான, அராஜகமாக இங்கே மாறிக் கொண்டிருக்கிறது..!
"அபினந்தன் பிடிபட்டது பிஜேபி அரசாங்கத்தின் தவாறால்தான் ..!" என்று இதைக் கூட வைத்து இந்திய அரசாங்கத்தை ஏளனம் செய்யவும், நம் நாட்டையே கேவலப்படுத்தவும், பிரிவினை வளர்க்கவும் இங்கே ஒரு மாக்கள் கூட்டம் இருக்கிறது..! இது பாகிஸ்தானுக்குத் தெரியும்; அந்தக் கூட்டத்தை ஐந்து ஆண்டுகளாக வளர்ப்பதே பாகிஸ்தான்தான்..!
அதனால்தான் பாகிஸ்தான், அபினந்தன் பிடிபட்டதை விலாவாரியாக வீடியோவில் காட்டுகிறது..! அதை வைத்து இங்கிருக்கும் புல்லுருவிகள், அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரம் செய்வார்கள் என்பதே அவர்களின் நோக்கம்..! பாகிஸ்தானுக்கு இன்றைய முக்கியத் தேவை ராணுவ வெற்றி அல்ல; பிஜேபி அரசை அகற்றுவதுதான்..!
பிளான்படியே, இங்கிருக்கும் உள்ளூர் துரோகிகளின் அசிங்கப் பிரச்சாரங்கள் இப்போது நடக்கிறது..! மோடி வெறுப்பில், நாட்டையை காவு கொடுக்கும் சாத்தான்கள் போல ஆகி விட்டார்கள்..!
இதற்கு மேல் நான் சொல்ல ஏதுமில்லை. ஈனப்பிறவிகள் கண்டு வெறுப்பில் மனம் அமைதி கொள்ளவில்லை.
நன்றி Shankar Rajarathnam சார்

No comments:

Post a Comment