Monday 20 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
⚃ பொருட்களை அளவோடு பயன் படுத்துவதும், உறவுகளை அளவோடு வைத்துக் கொள்வதும், இரண்டுமே நீண்ட காலம் நம்முடன் இருக்கும்.
⚃ வாய்ப்பை கிடைக்கும் போது பயன் படுத்தி கொள்ளுங்கள், தேடிப் போகும் வாய்ப்பை விட எதிர்பாராமல் கிடைக்கும் வாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும்.
⚃ நோய்களிலே மிகக் கொடிய நோய் மற்றவர்கள் மீது அக்கறையற்று இருப்பதே.
⚃ எவ்வளவு தான் நெருங்கிப் பழகினாலும், பேசும் வார்த்தைகளை அளந்து பேசுவோம். உறவுகளின் விரிசல்களை தவிர்த்து விடலாம்.
⚃ பிறந்தோம் வளர்ந்தோம் என்றில்லாமல், பிடித்தாற் போல் வாழ்வதே புரட்சிகரமான வாழ்வு தான். அப்படியே இறுதி வரை வாழ முடிந்தால். அது வெற்றி தான்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment