Saturday 18 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சத்யா ஸ்டூடியோவில், "நவரத்தினம்" படத்திற்கான பாடல் எழுதும் நேரம் உணவு இடைவேளை... கவிஞர் வாலி உட்பட சுமார் 20 - 25 பேர் இருந்தனர்.
வழக்கம் போல கற்பகவிருட்சமான ராமாவரம் தோட்டத்திலிருந்து இரண்டு பெரிய கேரியரில் சாப்பாடு வந்தது. எம்ஜிஆர் எல்லோரையும் சாப்பிட அழைத்தார். அப்போது வாலி தன்னுடன் வந்த நண்பர் பாகவதருக்கு, தான் எம்ஜிஆர் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட இருப்பதால், அவருக்குப் பணம் கொடுத்து ஓட்டலில் சாப்பிடச்சொல்கிறார்...
இதைக் கவனித்த எம்ஜிஆர், வாலியிடம் "நீங்க சாப்பிடுங்க, நா இதோ வரேன்" ன்னு சட்டென்று வெளியில் வந்து, "வாலியுடன் வந்த நண்பர் நீங்க தானே, சேர்ந்து சாப்பிலாம் வாங்க..."என்று கையைப்பிடித்துக் கூட்டிப்போனார்...
அந்த நண்பருக்கோ இன்பஅதிர்ச்சி..."எம்ஜிஆர் மரியாதை தரும் அளவுக்கு நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா??? "
அதுமட்டுமில்லாமல், அனைவரும் தரையிலே உட்கார்ந்து தான் சாப்பிட்டனர் எம்ஜிஆர் உட்பட...
"நீங்க போய் தரையில் உட்காரலாமா...?" என்று எம்ஜிஆரிடம் கேட்டதற்கு, "யானைக்கவுனியில் நான் இருந்தபோது#டைனிங்டேபிளிலா #சாப்பிட்டேன்...இப்படி உட்கார்ந்து சாப்பிடத்தான் பிடிக்கும்..." என்றார்.
அதுபோல தினசரி #பழையதை #மண்சட்டியில் #உண்பதைவழக்காகக் கொண்டிருந்தார்...
#பழசை #மறக்கக்கூடாது என்பதால்...
( இதில் ஒரு விஷயம் என்னன்னா...அந்த நண்பரை சாப்பிட அழைக்க வாலியையோ, அல்லது வேறு யாரிடமாவது சொல்லியோ சொல்லியிருக்கலாம். வேறு யாராவது இருந்திருந்தால் அப்படித்தான் செய்திருப்பர்...யாரும் தவறாக எண்ணியிருக்கவும் மாட்டார்கள்...)
ஆனால் எம்ஜிஆர் அப்படிச்செய்யவில்லை.
செய்யவும் மாட்டார்.
#ஏன்னா #அவர் #தான்#எம்ஜிஆர்...ஆச்சே!

No comments:

Post a Comment