Tuesday 21 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு மனிதன் பணம் இருக்கும் போது எப்படி இருக்கிறான், பணம் இல்லாத போது எப்படி இருக்கிறான் என்பதை ஒரு ஆங்கில தொகுப்பிலிருந்து மொழிபெயர்த்துள்ளேன். வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவர் வீட்டில் காய்கறிகளை சாப்பிடுகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவரே ஒரு நல்ல ஹோட்டலில் காய்கறிகளை சாப்பிடுகிறார்.
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவர் வேலைக்கு சைக்கிளில் போகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் சைக்கிளை உடற்பயிற்சி செய்ய உபயோகப்படுத்துகிறார்.
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, உணவை அவர் சாப்பிடுகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, உணவு அவரை சாப்பிடுகிறது.
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவர் திருமணம் செய்ய விரும்புகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் விவாகரத்து பெற விரும்புகிறார்.
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவரது மனைவி செயலாளராக வேலைக்கு செல்கிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் செயலாளரை மனைவியாக ஆக்கிக் கொள்கிறார்.
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, ஒரு பணக்காரனை போல செயல்படுகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் ஒரு பிச்சைக்காரன் போல செயல்படுகிறார்.
மனிதன் பங்கு சந்தை மிக மோசமாக உள்ளது என்பான். ஆனால் அதில் சாமார்த்தியசாலியாக இருப்பார்.
மனிதன் பணத்தை சாத்தான் என்பான். ஆனால் பணத்தாசை அடங்காமல் பணத்தின் மேல் ஏக்கம் கொள்வான்.
மனிதன் உயர் பதவிகளை பெற்றுக்கொண்டே இருப்பான். ஆனால் அதை போராடி பெற்றதாக தம்பட்டம் கொள்வான்.
பணம்தான் நிம்மதியை கொடுக்கும் என்று பணம் பணம் னு அலைவான் ஆனால் பணம் வந்த பிறகு நிம்மதி நிம்மதி என்று அலைவான்.
பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை.....
பணத்திற்கும் #நிம்மதிக்கும் சம்பந்தமில்லை......
நன்றி திரு பிரேம்நாத்

No comments:

Post a Comment