Wednesday 29 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அம்மாவின் அரசு கல்வித் துறையில் தொடர்ந்து சாதனை...........
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் “இன்சூரன்ஸ்”...
News Fast
🇮🇳🇲🇾🐅
நாட்டிலேயே முதல் முறையாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விபத்துக் காப்பீடு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திருச்சியில்நிருபர்களிடம் கூறியதாவது-
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள்,மாணவிகளுக்கு விபத்துக்காப்பீடு வழங்க தமிழக அரசுபரிசீலித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.
ஆனால், இந்த விபத்துக்காப்பீடு திட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவர்கள் மட்டும் பயன் பெறுவார்களா அல்லது அரசு உதவி பெறும் அனைத்து பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும் பயன்பெறுவார்களா என்பது குறித்து தெளிவாக அமைச்சர்கள் கருத்துக்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.
ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 1.4 கோடி மாணவர்கள் பல்வேறு விதமான பள்ளிகளில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது-
நாட்டிலேயே களில் தமிழகத்தில்தான் அதிகமான விபத்துக்கள் நடக்கின்றன. அதிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே அதிகமான விபத்துக்கள் நிகழ்கின்றன. கடந்த 2016ம் ஆண்டில் 5 ஆயிரத்து 10 விபத்துகளில், 1,207 பேர் உயிரிழந்துள்ளனர், 6 ஆயிரத்து 233 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் 1.5 கோடி குடும்பங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் காப்பீடு திட்டத்தை அரசு செய்து கொடுத்துள்ளது என தெரிவித்தனர்.
தகவல். திரு ஏ ஆர் லெட்சுமணன்

No comments:

Post a Comment