Monday 27 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இரட்டை இலை சின்னம் விவகாரம் 'சுபத்தோடு' முடிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே..
ஓபிஎஸ், ஈபிஎஸ், மைத்ரேயன் ஆகிய மூவருமே அமைச்சர் ஜெயக்குமாருக்கு தனிப்பட்ட ரீதியில் நன்றி தெரிவியுங்கள் என்று மோடி அன்ட் கோ அறிவுறுத்தியிருக்கிறது..
சசிகலா குடும்பம் அதிமுகவைவிட்டு தள்ளியிருக்க வேண்டும் என்று அமைச்சர்களில் முதல் ஆளாய் குரல் கொடுத்தது.. தொடர்ந்து ஜெர்க்கே ஆகாமல் அதே டெம்ட்டில் எதிர்ப்பை மெயிண்டெயின் பண்ணியது
அணிகள் இணைப்புக்கு முக்கிய பேஸ்ட்டுபோல நிதியமைச்சர் பதவியை முரண்டுபிடிக்காமல் கேட்டவுடன் ஓபிஎஸ்க்கு விட்டுத்தந்தது போன்ற சம்பவங்களே இதற்கு பின்னணி என்கிறார்கள்..
நமக்கு ஒரு சந்தேகம் எப்போதுமே உண்டு.. நடிகர் கமல் அதிகம் கபடி விளையாடுவது ஜெயக்குமாரி டம்தான்.. மற்றவர்களைவிட கமலிடம் அதிகம்
கபடி விளையாடுவதும் ஜெயக்குமார்தான்..
கமல் மாநில அரசைத்தான் தாக்குவார்..மத்திய அரசை பெரியதாக டச் செய்யமாட்டார்.. மத்திய அரசின் செல்லப்பிள்ளையோ என சந்தேகிக்கப்படும் கமலும் நிஜ செல்லப்பிள்ளை ஜெயக்குமாரும் மோதிக் கொள்வார்கள்..
ஜெயக்குமாரா கொக்கா, சென்னை மாநகராட்சியின் முதல் வார்டுக்கு அந்த காலத்திலேயே அண்ணாவால் கவுன்சிலர் ஆக்கப்பட்ட துரைராஜ் வாரிசு ஆச்சே..
அரசியலில் சகல நீச்சலையும் அடிக்க 'மீன் வளத்துக்கு' சொல்லியா கொடுக்கவேண்டும்?
நன்றி திரு எழுமலை வெங்கடேசன்

No comments:

Post a Comment