Monday 27 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இந்த நிகழ்வு, உலகில் இன்னும் *மனிதமும், மனிதாபிமானமும்* சாகவில்லை என்பதை இந்த சோஷியல் மீடியாக்கள் மூலம் நிரூபணமாகி உள்ளது.
வித்யா - கேரளாவில் உள்ள தம்பனூர் இரயில் நிலையத்தில் ஒரு வயதான பெண்மணி, குப்பைகளிலும், கழிவுகளிலும் பொறுக்கி எடுத்துத் தின்று, தன் பசி எனும் மகாக்கொடுமையை தீர்க்கும் அவலத்தைப் பார்க்கிறாள்.
மனம் பதைபதைக்கிறது.
உடன் ஓடிச்சென்று, உணவுப் பொட்டலம் வாங்கி வந்து, உண்ணக் கொடுக்கிறாள்..
பசியாறும் வேகத்தைப் பார்த்து, வயிறார உண்டு பல வாரங்கள் கூட ஆகி இருக்கலாம்.
பேச்சுக் கொடுத்து, விபரம் கேட்கிறாள், யார்? எந்த ஊர்? இங்கே இது வரை என்ன செய்துகொண்டு இருந்தாய் என்று....
அந்த வயதான பெண்மணி சொல்கின்ற விபரங்களைக் கேட்டு, வித்யாவின் உடல் எங்கும் மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்து போகிறாள்..
மூச்சே நின்றுவிடும் நிலைக்கு ஆளாகிறாள்..
ஆம், அந்தப் பெண்மணி *வத்சா டீச்சர்*..!! மலப்புரம் ஊரில் உள்ள பெருமை மிகு பப்ளிக் ஸ்கூலின் *கணக்கு டீச்சர்*..!!!!!
ஒரு நிமிடம் கூட வித்யா வீணாக்கவில்லை..
அந்தக் கணமே அந்த வத்சா டீச்சரைப் படம் எடுத்து, தன் நண்பர்களுக்கு சோஷியல் மீடியாக்களில் பகிர்கிறாள்..
எதிர்பார்த்ததை விட, மாபெரும் அதிசயம் நிகழ்கிறது..
உலகம் எங்கும் விரவிக் கிடக்கும் அத்தனை பழைய மாணவர்களும் சொல்லி வைத்தாற் போல அனுப்பிய பதில் :
*அவரை எங்கும் விட்டுவிடாதே, உடனடியாக நாங்கள் திருவனந்தபுரம் கிளம்பி வருகிறோம், நாளை காலையில் அந்த இரயில் நிலையத்தில் இருப்போம்* என்று..
அடுத்த நாள், ஒரு இரயில் முழுக்க மாணவர்கள் வந்து இறங்குகிறார்கள்..
தங்கள் டீச்சரை சென்று, சந்திக்கிறார்கள்.
உடனடியாக அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை, புதிய ஆடை, அணிகலன் எல்லாம் செய்து கொடுத்து, தன் வாழ்நாள் முழுவதும் நலமுடன், வளமுடன் இருக்க ஆவன செய்து கொடுத்து, அழைத்துச செல்கிறார்கள்..
இங்கே ஜெயித்தது :
1. *மனிதாபிமானம்*
2. ஆசிரியரின் *உள்ளார்ந்த சேவை.*
3. நல்லதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய *சோஷியல் மீடியாக்கள், பிளாட்ஃபாரங்கள்..*
வீண் வதந்தி, பொய்த் தகவல்கள்,
பழிப்பு, கிண்டல், கேலி
இவற்றைத் தவிருங்கள்..
நன்றி ஆா் விஸ்வநாதன்

No comments:

Post a Comment