Monday 20 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கேடு கெட்ட ஜென்மம் சார் நாங்க...
ஒரு பைக் வாங்க எவ்ளோ நாள் நண்பா கனவு கண்டிருப்போம்?
ஒரு ஃபோன் வாங்க எவ்ளோ நாள் நண்பா ஏங்கி தவிச்சிருப்போம்?
ஒரு நல்ல பிராண்டட் டிரெஸ் பிராண்டட் ஷூ எப்போ போட்டுருப்போம்?
அட ஒரு ஃபிகர உஷார் பண்ண எவ்ளோ ரிஸ்க் எடுத்திருப்போம்? பணக்காரனா நம்மல காட்டிக்க எவ்ளோ வேஷம் கட்டியிருப்போம்?
“புடிச்சத படிக்க, நினைச்சத செய்ய, ஆசைப்பட்டத அடைய” என எவ்வளவு போராடியிருப்போம்.
ஆனால் உதயநிதி ஸ்டாலினோ? துரை தயாநிதியோ? அருள்நிதியோ? திவாகரன் மகன் ஜெய்ஆனந்தோ?
இளவரசி மகன் விவேக் ஜெயராமனோ? இப்படி எதுக்காகவாவது ஏங்கியிருப்பாங்களா?
25 வயசுக்கு பிறகு தான் நமக்கெல்லாம் குடும்ப பாரம் என்றால் என்ன என்றே தெரிய ஆரம்பிக்குது, மாதம் 50,000 சம்பாதித்தால் கூட 3 லட்ச ரூபாவை சேமிக்க 10 வருஷம் போராட வேண்டியிருக்கு, ஆனால் அழகிரி மகன் சினிமா தாயாரிப்பாளர், ஸ்டாலின் மகன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர், 27 வயசுல ஒரு டிவி சேனலுக்கு அதிபர் ஆகின்றான் விவேக் ஜெயராமன், வருங்கால கல்வி மஹானாகின்றான் ஜெய்ஆனந்த். 5000 ருபாய மாசம் சேமிக்க அல்லாடிகிட்டு இருக்கையில் 1000 கோடி ரூபாய்க்கு விவேக் பெயரில் ஜாஸ் சினிமாஸ் வாங்கப்பட்டது என்ற செய்தியை கேட்டப்போ என்னை மாதிரி எவனாவது ஒருத்தனாவது “எவன் அப்பன் வீட்டு காசுடா இதெல்லாம்” என கோவப்பட்டதுண்டா?
உதயநிதியையும், துரைதயாநிதியையும், விவேக்கையும் ஜெய்ஆனந்தையும் பெத்தவங்க எல்லாம் திறமைசாளிகள் எனில் நம்மை பெத்தவங்க எல்லாம் முட்டாளா? இல்லை நாம தான் திறமையற்றவர்களா? பெத்தவங்களை சார்ந்து வாழ்ந்து வளர்ந்து நிற்கும் அவங்களுக்கே இவ்வளவு இருக்கும் போது., சொந்த கைய ஊன்றி எழுந்து நிற்கும் நமக்கெல்லாம் எவ்வளவு இருக்கனும்?
டிடிவி வீட்ல ரைடாம்? ஒண்ணும் கிடைக்கலையாம்? அய்... ஜாலி... என சந்தோஷப்படுவதற்கு என்ன சார் காரணம்?
உங்க சாதிப்பற்றா? இல்ல அவங்க உங்க சொந்தக்காரங்களா?
உன்னையும் என்னையும் ஏய்த்து உனக்கும் எனக்கும் எட்டாக்கனியாக இருக்கும் பல விஷயங்களை எளிமையாக அடைந்து வாழ்ந்து பெருத்து அசுரராய் நிற்பவர்களை நம்மால் எதிர்க்க முடியவில்லை எனில் எவனோ ஏறி மிதிக்கின்றான் எனில் அதைக்கண்டு மகிழ்ச்சி கொள், உன் உரிமைகளையும் உனது இனப்பற்றையும் காட்ட இது நேரமில்லை, நம் இயலாமையின் வலிக்கு எவனோ ஒருவன் மருந்து போடுகின்றான் என நினைத்துக்கொள். இன்றைக்கு இவனை மிதிப்பவனை நாளைக்கு எவனோ ஒருவன் மிதிப்பான் என நம்பிக்கை கொள். திருடனாய் இருந்தாலும் தமிழன் எனில் ஆதரவு கொடுக்கனும் என்ற முட்டாள் தனம் இருக்கும் வரை நம்ம அப்பனும் பாட்டனும் சலாம் போட்ட மாதிரி தான் நாளைக்கு உன் மகனும் என் மகனும் விவேக்குக்கோ? ஜெய் ஆனந்துக்கோ? உதயநிதிக்கோ துரை தயாநிதிக்கோ? சலாம் அடிப்பானுங்க.
என்னடா ஸ்டாலின், அழகிரி,கனிமொழி, சசிகலா, திவாகரன், தினகரனை எல்லாம் விட்டுட்டேனே என பார்க்குறீங்களா? அவங்களுக்கெல்லாம் தான் நாம சலாம் அடிச்சிகிட்டு இருக்கோமே இத சொல்ல எதுக்கு வெட்கப்பட்டுகிட்டு.
மானத்தமிழன் சார்...
#சத்யாலயா ராமகிருஷ்ணன்

No comments:

Post a Comment