Monday 20 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வரலாற்றில் மறைக்கபட்ட செய்தி!
மகாத்மா காந்தி தன்னுடைய ஆடை வடிவத்தை மாற்றிக்கொண்ட இடம் மதுரை எனும் செய்தியும் தொடர்வண்டிப் பயணத்தின் போது சோழவந்தான் பகுதியில் வயல் வெளியில் விவசாயிகளின் உடையைப் பார்த்து மனம் மாறி தன் உடையையும் அதுபோல் மாற்றிக்கொண்டதாகவுமான வரலாறு..
20-07-1975 தேதியிட்ட "இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி" எனும் ஆங்கில இதழில் வந்துள்ள செய்தி..
மதுரை மீனாட்சி மில் உரிமையாளரும் அன்றைய அ இ காங்.கமிட்டி உறுப்பினருமாயிருந்த ," தமிழ்நாடு" எனும் நாளிதழ் நடத்தி வந்தவருமான கருமுத்து.திரு.தியாகராசன் செட்டியார் தன் அலுவலகத்துக்கு காந்தி வந்த போதுதான்
Loin - Cloth ..வேட்டியும் போர்த்தும் துண்டும் மாற்றிக்கொண்டார்.
திருமதி.விசாலாட்சி ஆட்சி காந்திக்கு உணவு பரிமாறியதாகவும் தியாகராசன் செட்டியார் அணிவித்த துண்டுதான் முதன் முதல் உடை மாற்றாக காந்திக்கு அமைந்தது எனும் செய்தியும் அறிந்து வியப்படைந்தேன்.
ஒரு தமிழன் வீட்டில் காந்தியின் வரலாற்று சம்பவம் நடந்ததும் அந்த தமிழன் இந்தி திணிப்பை எதிர்த்து அ இ காங்.கமிட்டி உறுப்பினர் பதவியை விட்டு விலகியதையும் அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
சிவகங்கை மாவட்டம்,ஆ.தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருமுத்து.திரு.தியாகராசன் செட்டியார் என்பதும் எனக்கும் அதுவே சொந்த ஊர் என்பதும் இச்செய்தியின் பின்புலம்..
கீழடியில் புதைந்திருந்த தமிழனின் வரலாறு
தோண்டப்பட்டது போல்...
இன்னும் தோண்டினால் தான் இதுபோன்ற மறைக்கப்பட்ட வரலாற்றுச் செய்திகள் வரலாறு படைத்த தமிழர்களை அடையாளம் காட்டும்!
நன்றி மூத்த பத்திரிகையாளர் அரப்பா

No comments:

Post a Comment