Monday 20 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 *சவூதி ஒரு பணக்கார தேசம் என்று நிறையப் பேர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்!..*
உண்மையில் அப்படி அல்ல. அது ஒரு ஏழை நாடு தான். வளரும் நாடு கூட அல்ல. என்ன ஒரு வித்தியாசம் அரசின் கஜானாவில் நிறைய பணம் இருக்கிறது அவ்வளவுதான். காரணம் என்ன? பெட்ரோல் விற்ற பணத்தை அப்படியே கஜானாவில் வைத்திருக்கிறார்கள். சில திட்டங்கள் பெரிய சாலைகள் அமைத்தது, பல மாடி கட்டிடங்களை கட்டியது அவ்வளவுதான். இருக்கும் பணத்தை அவர்கள் அடிப்படை வசதிகளுக்குச் செலவிட்டால் அது ஒரு சதவீதம் அளவிற்கு மட்டும் தான் உள்ளது. நாம் அவர்களை விட கோடி மடங்கு உயர்ந்த நிலையில் இருக்கிறோம். உதாரணமாக அவர்களின் தேசத்தில் வெறும் ஆயிரம் கி மீ நீளத்திற்கு மட்டும் இருப்பு பாதை உள்ளது அதில் மொத்தமாக ஆறே ஆறு நகரங்களில் மட்டுமே ரயில்வே ஸ்டேஷன் சொல்லும் படி இருக்கிறது. மொத்த கோச்களும் நூறு வேகன்கள் தான் உள்ளது. மொத்தமே வெறும் ஐந்தே ஐந்து ரயில் இன்ஜின் தான் அவர்கள் வசம் இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். பேருந்து நிலையம் என்று ஒன்று எங்குமே இல்லை. சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தம் அளவிற்கு கூட அவர்களின் பேருந்துகள் நிறுத்தமோ பெயரளவிலான பேருந்து நிலையங்களோ கிடையாது என்றால் புரிந்து கொள்ளுங்கள். தனியார் மற்றும் அரசின் வசம் மொத்தமாக ஆறு நூறு பேருந்துகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை தவிர வேறெங்கும் சரியான சாலைவசதிகள் இல்லை. ஊருக்குள் சிறப்பான சாலை வசதிகள் இருக்கிறது அனால் சிறு நகரங்களை கிராமங்களை இணைக்க சாலை வசதிகள் இல்லை. மூன்றே மூன்று தரமான பன்னாட்டு விமான நிலையங்களும், கோவை பன்னாட்டு விமான நிலையம் போல வேறு இரண்டு விமான நிலையங்களும், சேலம் தூத்த்ட்டுக்குடி விமான நிலையங்கள் போல வேறு பத்து உள்நாட்டு விமான நிலையங்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள். குடிநீர் மின்சாரம் அது தொடர்பு செய்திருக்கின்ற பல்வேறு பகுதிகளில் தட்டுபாடில்லாமல் கிடைக்கிறது என்பது மட்டுமே அவர்களின் சிறப்பு!... நெடுஞ்சாலைகளில் என்பது சதவீத தூரத்திற்கு மின்சார விளக்குகள் கிடையவே கிடையாது. மருத்துவமனைகள் நூறு கி.மீ தூரத்தில் ஓரளவிற்கு சொல்லத்தக்க அளவில் இருக்கிறது. அதில் வேலை செய்வதற்கு வெளிநாட்டவர்களை தான் நம்பி இருக்க வேண்டிய நிலை. ஒவ்வொரு ஊருக்கும் வெள்ளி கிழமை வார சந்தைதான் உண்டு, நிரந்தரமாக காய்கறி மார்க்கெட் கிடையாது. மால்களில் சென்று தான் பெற்று கொள்ளவேண்டும். நூல் நூற்க்கும் ஆலைகளோ துணி தைத்து தரும் ஆலைகளாலோ அவர்கள் ஏற்பாடு செய்திருக்கவில்லை. வெளி நாட்டிலிருந்து தான் வரவேண்டும். காஸ் சிலிண்டர் இந்தியாவில் இருந்து தான் உற்பத்தி செய்து தரவேண்டும் என்ற நிலை. சூரியக் கதிர் தாக்கத்தாலும் சோலார் முறை மின்சாரம் தயாரிப்பதில் அக்கறை இல்லை, அது போலவே காற்றாலைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க விரும்புவதில்லை. ஒரே ஒரு பொருளைத் தவிர அனைத்தும் பத்து மடங்கு பத்தே வருடத்தில் விலை ஏறி விட்டது. குபூஸ் என்று சொல்லும் சப்பாத்தி போன்ற ரொட்டி ஒரு ரியலுக்கு ஐந்து, விலை எட்டப்படவில்லை. பெட்ரோல் எழுபது சதவீதம் ஏற்றினார்கள் மேலும் ஐம்பது சதவீதம் ஏற்றப் போகிறார்கள். ஒரு ஆரம்பக் கல்வி ஆசிரியாருக்கு இரண்டு லட்சம் ருபாய் சம்பளம் தருகிறார்கள் அதே அளவிற்கு உள்ளூர் போலீசிற்கு அவர் ட்ராபிக் போலீசானாலும் சரி தருகிறார்கள். ரியல் எஸ்டேட்விலைவாசி அதிகம். அரசின் துறையில் வேலை செய்யாத சவுதிகளின் நிலை மிகவும் சங்கடத்திற்கு உரியது தான். ஒட்டகத்தை விற்று நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள் மற்றபடி வேறு பெரிய தொழில் பரவலாக இல்லை. வரதட்சிணை தந்து மாளாது வரும் சந்ததியினரால். குறைந்த பட்சம் இருபது லட்சம் ரூபாயும், ஒரு லக்சூரி காரும் (LEXUS, BMW, LAND CRUISER V8), இருநூறு பவுன் தங்க நகைகளும் வரதட்சிணையாகத் தந்தால்தான் அந்த ஊரு பெண்கள் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். இல்லை என்றால் திருமணம் ஆன பிறகும் கூட கணவனை டெலீட் (இந்த வார்த்தையை தான் பிரயோகிக்கிறார்கள்) செய்து விடுகிறார்கள். குடும்பங்கள் எப்படி சமாளிக்கும் என்று தெரியவில்லை. வாங்கி கடன் பெற்றே திருமணம் போன்ற சமுதாய நிகழ்வுகள் நடக்கிறது அங்கே. ஐந்து குழந்தைகளை குறைந்ததது பெற்று கொள்கிறார்கள், அவர்களை வளர்ப்பதற்கு சிரம படுகிறார்கள். விலைவாசியை அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டது என்று அனைவருமே ஏற்கிறார்கள். அரசின் மானியத்தை மட்டுமே வைத்து விலைவாசியை கட்டுப்படுத்தி வந்தவர்கள், மானியம் தர முடியாததால் விலைவாசி அதன் போக்கில் ஏறுவதை வேடிக்கைப் பார்க்க முடியாமலும் ஜீரணிக்க முடியாமலும் இருக்கிறார்கள்!.. அதை சரிக்கட்ட எடுக்கப்படும் நடவடிக்கை தான், செலவுகளை பெருமளவில் குறைப்பது!.. மாணவர்களுக்கு இப்போதெல்லாம் அரசு சப்சிடியோ அல்லது ஸ்டைபண்டோ தருவதில்லை. ஆகையால் தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. படித்து முடித்தவர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை!..
நிறையப் பணக்காரர்கள் இருக்கிறார்கள்!..
அவர்களிடமிருந்து எடுத்து தான் சமச்சீர் செய்யவேண்டிய நிலை உள்ளது!..

No comments:

Post a Comment