Wednesday 22 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கொஞ்சம் யோசிங்க..
நம்முடைய நேரத்தை
எப்படி எதில் செலவழிக்கிறோம் என்று?
அரசியல், சினிமா, பொழுதுபோக்கு
என்று தொலைக்காட்சி ஊடகங்கள்
முழுநேரமும் அதையே காண்பித்து
நம்மை வளர விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
பெருவாரியான பத்திரிக்கைகள்
இதையேதான் பதிந்து நம்மை
படிக்க வைத்து அடிமையாக்கி விட்டனர்.
ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகள் வருவது
அரிது.... நாம் அதை பார்ப்பதோ மிகவும் அரிது.
நல்ல புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்
குறைந்து விட்டது.. வாங்கும் புள்ளி விவரங்கள் வாசிக்கும் புள்ளி விவரங்கள் ஆகாது.
எது திரும்பத்திரும்ப நம்முள் செல்லுகிறதோ அதுவாகவே நாம்
மாறிவிடுவோம்.
தினசரி ஒரு மணிநேரமாவது நல்ல பக்கங்களை படிப்போம்..
நல்ல நிகழ்ச்சிகள் பார்ப்போம். இரவு 10:00மணிக்கு உறங்கி காலை 5 மணிக்கு
எழ முயற்சி செய்வோம்.
நேரம் எல்லோருக்கும் ஒன்று தான்.
அதை நல்ல நேரமாக மாற்றுவது
நம் கையில்....
☺️விசு

No comments:

Post a Comment