Thursday 30 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனம் என்பது வெல்ல முடியாத ஒன்று என்றும், அதை அடக்கி ஒடுக்குவது
அவ்வளவு எளிதான செயலல்ல என்றும் அழுத்தமாக மனதில் பதிய வைத்துக் கொண்டு தியானம்
செய்ய அமரும் பொழுது மனம் அடங்குவதில்லை. எண்ணங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன.
பிறகு என்னதான் வழி ? ஒரு வழிதான் உண்டு. மனதை தெய்வீகத் தன்மை உடையதாக ஆக்கிக் கொள்வது மட்டுமே
ஒரே வழி. மற்ற எந்த உபாயங்களைக் கையாண்டு மேலேறினாலும் சாண்
ஏறினால் முழம் சறுக்கும் நிலைதான்.
நல்லதும், தீயதும் நேருக்கு நேர் எதிர் கொள்ளும் போது அந்த இடத்தில் பரபரப்பும். செயலும் எழுகின்றன. இந்த இரண்டு உணர்ச்சிகளில் இருந்து நம் மனமானது ஒரு போதும் தப்ப முடிவதில்லை.
எனவே அவற்றின் வயப்பட்டு அவற்றால் விளையும் இன்ப துன்ப நுகர்ச்சியில் வீணே பொழுதை விரையம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு சமயம் செய்யக் கூடாத செயல்களைச் செய்து விட்டு துன்பப்படுகிறோம். இன்னொரு சமயம் எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து விட்டு நல்ல செயலைச் செய்து விட்டு
கர்வம் கொள்கிறோம்.
இவ்வாறு உள்ளத்தில் நன்மைக்கும், தீமைக்கும், கடவுளுக்கும், சைத்தானுக்கும், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடைபெறும் யுத்தம் நிரந்தரமானதாக இருக்கிறது. மனதை தெய்வீகமான
வழியில் செலுத்தும் போதுதான் அங்கே படிப்படியாக தீமை என்பது விலகி பிறகு நிரந்தரமான நன்மை மட்டும் மிஞ்சுகிறது.
அதையும் களைந்து விட வேண்டியது அவசியமாகும். என்றாலும் தீமையின் அளவுக்கு நன்மையானது எண்ணங்களை வளர்ப்பதில்லை. அர்ஜுனனைப் போல இறைவனிடம் ரதத்தை ஒப்படைத்து
விட்டால் பிறகு கவலை இல்லை அல்லவா ? அவரை எங்கே போய் தேடுவது ? நம் ஆன்ம தாகம் தான் இறைவன் வேறு யாருமல்ல,
கண்ணனையே சாரதியாக அமர்த்திக் கொண்ட அர்ஜுனனுக்குத்தான் வெற்றி கிட்டுகிறது. அந்த நிலைக்கு நம் மனம்
வந்து விடுமானால், அதன் பிறகு நாம்
வெறும் கருவிதான். அதன் பிறகு
காரியங்கள் கச்சிதமாக நடைபெற்று விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே நம் மனமெனும் ரதத்தை
தெய்வீக சாரதியின் கையில் ஒப்படைத்து விடும் சாதகனுக்கு தோல்வி என்பதே கிடையாது. எங்கும், எப்போதும்
வெற்றிதான். காரியமாற்றுவது மட்டுமே நம் செயல் இயக்குவதும், இயங்கச் செய்வதும் இறையாற்றலே.
எனவே தெய்வீகமே நம் உண்மையான இயல்பு. அதை அடைவது மட்டுமே நம் நோக்கம் என்ற ஆன்மதாகம் உள்ளவனுக்கு வெற்றி நிச்சயம்..!!
#ஸ்ரீராமஜெயம்.
நன்றி ராஜ்குமார்

No comments:

Post a Comment