Saturday 9 December 2023

வீட்டின் சாவியும் மனதின் சாவியும் .

 வீட்டின் சாவியும் மனதின் சாவியும் .

*நல்ல எண்ணங்களை விதைத்தவர்களுக்கு
அறுவடை காலம் ஆனந்தமானது.*
*உங்கள் எதிர்காலம்
உள்ளங்கை ரேகையில் இல்லை.
அது உங்கள் உள்ளத்தின்
உள் எண்ணத்தில் உள்ளது.*
*எண்ணங்கள் என்னும்
மந்திரச் சாவியை சரியாகப் பயன்படுத்தினால்
திறக்காத கதவுகளையும் திறக்கலாம்.*
*உங்கள் வீட்டின் சாவி
உங்களிடம் இருப்பது போல்,
உங்கள் மனதின் சாவியும்
உங்களிடமே இருக்க வேண்டும்.*
*விரும்பிச் செய்யும்
ஒவ்வொரு செயலிலும்
இருக்கும் அழகு
செயலாற்றும் நபருக்கு மட்டுமே தெரியும்,*
*வேடிக்கை மனிதர்களுக்குத்
தெரிய வாய்ப்பு இல்லை.*
*ஒரு மலரை
நீ நசுக்கியெறிந்தப் பிறகும்.*
*அது தரும்
மாறாத மணம் தான் மன்னிப்பு.*
*நேரம், நபர்கள் , சூழ்நிலை.*
*இவற்றிக்குத் தகுந்தாற் போல் முகமூடிகள் அணிபவர்கள்,*
*நிச்சயம் ஒரு நாள்
முகமூடிகள் கிழித்துத் தோலுரிக்கப்படுவார்கள்.*
*சேமித்த பணம்
வறுமையில்*
*பயன் அளிக்கும்.*
*சேர்த்து வைத்த
புண்ணியம்.*
*மறுமையிலும் துணை நிற்கும்.*

No comments:

Post a Comment