Tuesday 12 December 2023

அறிவு எனும் அரிய மருந்து .

 அறிவு எனும் அரிய மருந்து .

*நீயாக
வாய்ப்புகளைத் தேடி*
*போகாவிட்டாலும்*
*உன்னைத் தேடி வரும்*
*வாய்ப்புகளைத் தவற விடாதே*
*எது உன்னைத் தேடி*
*வருகிறதோ*
*அது மட்டுமே உனக்கானது*
*மனிதர்கள் உனக்காக
கை தட்டுகிறார்கள் என்பதைப் பார்த்து பெருமைபட்டுக் கொள்ளாதே.*
*நீ பெருமையில்
கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தாலே*
*உனக்காகத் தட்டிய அதே கைகள்*
*உன்னை
அப்படியே பிடித்து கீழே தள்ளிவிடும்.*
*என்றைக்கும் பணிவாக இரு.*
*புகழை தலைக்குள் ஏற்றிவிடாதே.*
*மனம் என்னும்
புத்தகத்தைப் படித்து விட்டால்*
*வேறெந்தப் புத்தகத்தையும்
படிக்கத் தேவையில்லை.*
*எது சரி என்று நம் இதயத்திற்கு தோன்றுகிறதோ
அதைச் செய்வோம்.
ஏனெனில், எப்படியிருந்தாலும் நாம் விமர்சிக்கப்படுவோம்.
நாம் ஒன்றைச் செய்தாலும் பழிக்கப்படுவோம், அதைச் செய்யாவிட்டாலும் பழிக்கப்படுவோம்.*
*ஈடுபாடு,
பங்கேற்பு,
பொறுப்புணர்வு
ஆகிய இந்த மூன்று அம்சங்கள்தான் செயல் திட்டத்தின் தாரக மந்திரங்கள்.*
*எப்போதும்
அனுசரித்துப் போகும் உறவுகளைச் சீண்டாதீர்கள். *
*அவர்களது செயல்கள் விலை மதிப்பற்றது**இழந்துவிட்டால் அதைப் பெறுவது ஆகப்பெறும் கடினம். *
*மற்றவரை
பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டால்.*
*நம் வாழ்க்கையைத்
தொலைக்கத் தயாராகிவிட்டோம்
என்று அறிக.*
*அறிவு ஒன்று தான்
நம்மிடம் இருக்கும் பயத்தை அகற்றும் அரிய மருந்து.*
*அறிவை
நாம் வளர்த்துக் கொண்டால்
எல்லா விதப் பயங்களும்
ஒழிந்து விடும்.*
*புகழ்ச்சியில்
வளர்பவனுக்குத் தான்
பிறர் துணை தேவை.*
*முயற்சியில்
வளர்பவனுக்கு
தன்னம்பிக்கையே துணை.*

No comments:

Post a Comment