Monday 4 December 2023

அனுபவமும் அவமானமும்

 அனுபவமும் அவமானமும் . .

நெருக்கமானவர்களிடம்
நாம் நம்பிச் சொன்ன
வார்த்தைகளை, மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப்படுகிறது நம் "நம்பிக்கை".
அவமானத்தை
அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள், அவமானப் படுத்த ஒருவர் இல்லையென்றால் நமக்குத்
தன்மானம் என்ற ஒன்று
தெரிந்திருக்காது.
பேசிவிட்டு யோசிப்பதை விட யோசித்துவிட்டுப்
பேசுங்கள்.
வாழ்க்கையில் ஏற்படும்
அநாவசியமான அத்தனை பிரச்சினைகளுக்கும்
முற்றுப் புள்ளியாய் அது அமையும்.
எதைச் சொல்லி உன்னை அசிங்கப்படுத்த நினைக்கின்றானோ, அதையே உன் ஆயுதமாக்கு.
மாஸ்டராகவும்,
குழந்தையாகவும்
சரிசமமாக இருப்பதில்,
சமநிலை பேணுபவருக்கே வெற்றி கிடைக்கின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் என்ன பேசிக்கொண்டிருக்கின்றோம்
என்பதைப் பற்றி, நமக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், நாம் அரிதாகவே அறிவுரை வழங்குகின்றோம். ஆனால் நாம் ஒரு கருத்தை தெரிவிக்கும்போது, மற்றவர் அதைச் செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்கின்றோம்.
அவர்கள் அதைச் செயல்படுத்த முடிவெடுக்காதபோது, பெரும்பாலும், நாம் அவற்றை விமர்சனமாக கருதுகின்றோம் அல்லது அவர்கள் நம்மை நம்பவில்லை என புரிந்துக் கொள்கின்றோம்.
செயல்முறை:
நான் மாஸ்டராகவும்,
குழந்தையாகவும்
இருப்பதில் முழுமையான சமநிலை பேணுவது அவசியம்.
ஒரு மாஸ்டராக, என்னால் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க முடிகின்றது.
ஆனால்,
நான் அறிவுரையைப் பெறும்போது, குழந்தையாக இருக்கும் உணர்வை பேணுவது அவசியமாகும்.
அதாவது,
புண்படாமல்,
மற்றவர்களின் கருத்தையும் விமர்சனத்தையும்
ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகும்.

No comments:

Post a Comment