Thursday 7 December 2023

புகழ்வதும் இகழ்வதும் . .

 புகழ்வதும் இகழ்வதும் . .

*பக்குவம் என்பது*
*படும்போது உணர்வதல்ல.*
*படுவதற்கு முன் நம்மை*
*தெளிவு படுத்திக் கொள்வதே.*
*அறிமுகத்தின் போதே*
*யாரையும்*_ _*மதிப்பிடாதீர்கள்.*
*யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ,யார் அறிவாளியோ அவர்கள் தான் முதலில்
விட்டுக் கொடுப்பார்கள்,
அனுசரித்துப் போவார்கள்,
பொறுத்துப் போவார்கள்.*
*விட்டுக்கொடுக்கும் குணமும் அனுசரித்துப் போகும்
மனசும் இருந்தால்
வாழ்க்கை எப்போதும் சுகந்தான்.*
*அன்பு மட்டும் தான் உலகில் நிரந்தரமானது. அதை உண்மையாக்குவதும் பொய்யாக்குவதும்
நாம் நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது.*
*அழகாய்ப் பேசும்
பல வரிகளை விட
அன்பாய்ப் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்.*
*உங்களுக்கு உதவ உங்கள் மூளையை*_ _*பயன்படுத்துங்கள்*
*மற்றவர்களுக்கு உதவ உங்கள் இதயத்தைப் பயன்படுத்துங்கள்.*
*புகழ்ந்து
பேசுபவரை புறக்கணித்து விடு.*
*இகழ்ந்து
பேசுபவரை இறக்கி விடு.*
*உன் இலக்கை நோக்கிப் பயணம் தொடரட்டும்.*
*வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்.*
*வாழ்வை வென்று விடலாம்.*
*வீசப்படும் கல்லால்,
குளம் சில நிமிடங்கள் கலங்கும்.*
*ஆனால்
வீசப்பட்ட கல்லோ மூழ்கி விடும்..*
*யாருக்கும்
தீங்கு செய்யாது,
எல்லோரின் நலன்
குறித்தும் சிந்தித்தலே
உண்மையான ஆன்மீகம்.*
*வாழ்க்கையில் பல அடிகள் வாங்கியவர்களுக்கு
எளிதில் கோபம் வருவது இல்லை.*

No comments:

Post a Comment