Wednesday 13 December 2023

பயனில்லாத கற்பனை

 பயனில்லாத கற்பனை . .

*நீங்கள் எவ்வாறு பேச வேண்டும்
என்று கற்றுக் கொண்டீர்களோ அதேபோல்
மெளனமாக இருக்கவும்
கற்றுக் கொள்ளுங்கள்.*
*மௌனத்தின் ஆளுமைத் திறனை அறிந்தவர்கள்
அதிகமாகப் பேசுவதில்லை.
நீங்கள்
ஆளுமை பெற்றவராக இருங்கள்.*
*பேச்சு
உங்களுக்கு வழி காட்டலாம்
ஆனால்
மௌனம் நிறைய சந்தர்ப்பங்களில் உங்களைப் பாதுகாக்கும்.*
*மொழிகள்
ஆயிரம் இருப்பினும்
மௌனம் மட்டுமே அழகாய் பேசுகிறது யாரையும் புண்படுத்தாமல்.*
*நீர்ப் பறவைகள்*
*போகின்றன*
*வருகின்றன.*
*அவற்றின் தடங்கள்*
*மறைகின்றன.*
*ஆனாலும்*
*அவை ஒரு போதும்*
*பாதையை*
*மறப்பதில்லை.*
*கடவுளின்
கண்ணுக்கு அற்பமானது எதுவுமில்லை.*
*அதுபோல
உனக்கும் அற்பமானது ஏதும் இருக்க வேண்டாம்.*
*பயன் இல்லாத
கற்பனையை விட்டொழி.
கண்களைத் திறந்து பார்.
உண்மையை உணர்ந்து கொள்வாய்.*
*பிறருக்குச் செய்யும் உதவியால் மனிதன் தனக்கே
நன்மை செய்து கொள்கிறான்.*
*மனதில் எழும்
ஒவ்வொரு எண்ணமும் கடவுளுக்கான காணிக்கையாகட்டும்.*
*நீ மட்டும் அறிவாளி என்று நினைக்காதே.
பிறர் கருத்துக்கும் மதிப்பு அளிக்க கற்றுக் கொள்.*
*கொடிய
குணங்களில் ஒன்று கோபம்.*
*கோபம் உங்கள் மனதை
கொதிக்க வைத்து விடும்.*
*கொதிக்கும் நீரில்
நம்மால் எதையும் பார்க்க முடியாது.*
*ஆனால் அமைதியாக இருக்கும் குளத்து நீரில்
நம் முகம் தெளிவாகத் தெரியும்.*
*நாம் எப்போதும் அமைதியாக இருப்பது நம் மனதுக்கு நல்லது
அதனால் உடலுக்கும் நல்லது.*
*அமைதி காப்போம்
ஆரோக்கியமாக*_ *வாழ்வோம்.*
*ஒவ்வொரு நீர்த் துளியும்*
*மரங்களுக்கு உயிரூட்டும்*
*ஒவ்வொரு*_ _*வியர்வைத் துளியும்*
*நம் வாழ்வை*_ _*உயர்த்தும்...*

No comments:

Post a Comment