Monday 11 December 2023

*நீயாக வாய்ப்புகளைத் தேடி* *போகாவிட்டாலும்*

 *நீயாக

வாய்ப்புகளைத் தேடி*
*போகாவிட்டாலும்*
*உன்னைத் தேடி வரும்*
*வாய்ப்புகளை தவற விடாதே*
*எது உன்னை தேடி*
*வருகிறதோ*
*அது மட்டுமே உனக்கானது*
*மனிதர்கள் உனக்காக கை தட்டுகிறார்கள் என்பதை பார்த்து பெருமைபட்டுக் கொள்ளாதே.*
*நீ பெருமையில் கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தாலே*
*உனக்காக தட்டிய அதே கைகள்*
*உன்னை அப்படியே பிடித்து கீழே தள்ளிவிடும்.*
*என்றைக்கும் பணிவாக இரு.*
*புகழை தலைக்குள் ஏற்றிவிடாதே.*
*மனம் என்னும் புத்தகத்தை படித்து விட்டால்*
*வேறெந்த புத்தகத்தையும் படிக்கத் தேவையில்லை.*
*எது சரி என்று நம் இதயத்திற்கு தோன்றுகிறதோ அதைச் செய்வோம்.. ஏனெனில், எப்படியிருந்தாலும் நாம் விமர்சிக்கப்படுவோம். நாம் ஒன்றைச் செய்தாலும் பழிக்கப்படுவோம், அதைச் செய்யாவிட்டாலும் பழிக்கப்படுவோம்.*
*ஈடுபாடு, பங்கேற்பு, பொறுப்புணர்வு ஆகிய இந்த மூன்று அம்சங்கள்தான் செயல்திட்டத்தின் தாரக மந்திரங்கள்.*
*எப்போதும் அனுசரித்துப் போகும் உறவுகளை சீண்டாதீர்கள். *
*அவர்களது செயல்கள் விலை மதிப்பற்றது**இழந்துவிட்டால் அதை பெறுவது ஆகப்பெறும் கடினம். *
*மற்றவரை பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டால்.*
*நம் வாழ்க்கையை தொலைக்க தயாராகிவிட்டோம் என்று அறிக.*
*அறிவு ஒன்று தான் நம்மிடம் இருக்கும் பயத்தை அகற்றும் அரிய மருந்து.*
*அறிவை நாம் வளர்த்துக் கொண்டால் எல்லா வித பயங்களும் ஒழிந்து விடும்.*
*புகழ்ச்சியில் வளர்பவனுக்குத் தான் பிறர் துணை தேவை.*
*முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை.*

No comments:

Post a Comment