Monday 11 December 2023

உள்வாங்கப் பழகுங்கள்

 உள்வாங்கப் பழகுங்கள் . .

சீன தேசத்தில் ஒரு அரசர்.
வித்யாசமான பேர்வழி.
மாமிச உணவின் ரசிகர். அதிலும் ஆட்டு மாமிசம் மனிதருக்கு மிகமிக இஷ்டம். அவரே தினம்தோறும் ஆட்டைத் தேர்ந்தெடுப்பார். அவர் எதிரிலேயே அந்த ஆடு வெட்டப்படும். அந்த ஆட்டை வெட்டுகிறவரும் ஒரே நபர்.
தினம்தோறும் அரண்மனைக்கு வருவார். அரசர் தேர்ந்தெடுத்த ஆட்டை ஒரே வெட்டில் கோடாரியால் வெட்டி விடுவார். தலை வேறு, உடல் வேறாகிவிடும். எந்த ஆட்டையும் அவர் அரைகுறையாக வெட்டி மறுமுறை வெட்டியதாக வழக்கமே இல்லை.
அரசருக்கு ஒரே ஆச்சரியம். "இந்த கோடாரியைத் தினம்தோறும் சாணை பிடிப்பாயா'' என்று கேட்டார்.
"இல்லை... சரியாக வெட்டுகிற பாணியில் வெட்டினால் கூர் மங்காது'' என்றார்.
"அது என்ன
சரியான பாணி'' என்றார் அரசர்.
முதல் நாள் இடது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன்.
அடுத்த நாள் வலது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன்.
இப்படி மாறிமாறி வெட்டுவதால் இருபக்கமும் சமமான கூர்மையுடன் இருக்கும்.
அதுமட்டுமல்ல வெட்டுகிறபோது கொடுக்கிற அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும். மாறாது. அதனால் இடது, வலது என்று மாறி மாறி வெட்டினால் கூர் தீட்டப்பட்ட மாதிரி ஆகிவிடும்'' என்றார் ஆட்டை வெட்டுபவர்.
"இந்தக் கலையைக்
கற்றுத் தர முடியுமா'' என்று கேட்டார் அரசர்.
"மகாராஜா
அதுமட்டும் என்னால் முடியாது. காரணம் எனக்கு யாரும் இதைக் கற்றுத் தரவில்லை. என் தாத்தா வெட்டும்போது தள்ளி நின்று பார்த்தேன்.
என் தகப்பனார் வெட்டும்போது
அருகில் நின்று கவனித்தேன்.
அவர்கள் யாரும் எனக்கு எதையும் சொல்லித் தரவில்லை. எந்தக் கலையுமே ஒருவர் மனசிலிருந்து அடுத்தவர் மனசுக்கு வருவது. இதை உள்வாங்கிக் கொள்ளலாமே ஒழிய சொல்லித் தந்துவிட முடியாது'' என்றார் ஆட்டை வெட்டுபவர்.
*கண்ணையும் காதையும் கருத்தாகத் திறந்து வைத்துக் கொண்டு உள்வாங்கப் பழகுங்கள்.
எந்த கலையும் கைகூடும்.*

No comments:

Post a Comment