Friday 22 December 2023

கல் வந்தாலும் சொல் வந்தாலும்

 கல் வந்தாலும் சொல் வந்தாலும் . .

*சிலரது
வாழ்க்கையிலிருந்து
சில வார்த்தைகள் உருவாகும்.*
*சில
வார்த்தைகள்
சிலரது வாழ்க்கையையே
உருவாக்கும்*
*சிலரது
வாக்கினால் விளைந்த வாழ்க்கை அனுபவத்தைத் தான்*
*நம்முடைய வாழ்வின்
பாடமாகக் கொண்டு*
*வாழ்க்கைப்
பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். *
*நாம் புதிதாக எதுவும் சொல்வதில்லை*
*சொல்லப் போவதுமில்லை*
*ஏனெனில் அனைத்தும்
ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது. *
*நாம் நினைவைத் தூண்டும்
கருவியாகத் தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம்*
*இதுவும் நம்முடையது அல்ல*
*அதுவும் நம்முடையதில்லை*
*ஆனாலும்
இவை எல்லாம் நம்முடையது என்று*
*நினைத்துக் கொண்டு
இருக்கிறோம்*
*இங்கே இருப்பது
இனிமையும், அன்பும் மட்டுமே அதை கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வோம்*
*பணக்காரத் தவறுகள்
தங்க நகை மறைத்து விடுகிறது.*
*ஏழைகளின் தவறுகள்
கவரிங் நகையில் மாட்டிக்கொள்கிறது.*
*யார் மீதாவது
கோபம் வந்தால் எளிதில் மீண்டு விடலாம்.*
*வருத்தம் வந்தால் மீளவே முடியாது.*
*அன்பு என்பது.*
*உடலால் வருவதல்ல.*
*மனதால் வருவது.*
*நீ அடைய நினைத்த இலக்கை அடையும் வரை
கல் வந்தாலும்
சொல் வந்தாலும்
கலங்காமல் நீ முன்னேறு அனைத்துக்கும் பதில் சொல்லும் உன் வெற்றியே.*
*முன்னேறி செல்லும்போது
காதுகளை மூடிக்கொள் இல்லையெனில்
உன் காதில் விழும் வார்த்தைகளாலேயே
நீ வீழ்ந்து விடுவாய்.*
*உங்களை உணராத*
*இடங்களில் ஒதுங்கியே*
*நில்லுங்கள்.*
*அதுவே சிறந்தது.*
*இன்று சிரமமாக இருக்கலாம். *
*நாளை அதை விடக் கொடுமையாக இருக்கலாம். *
*ஆனால் நாளை மறு நாள்
நமக்கான சூரியன் உதிக்கும். *
*துவண்டு விடாதீர்கள். *

No comments:

Post a Comment