Tuesday 5 December 2023

ரசிக்க சகிக்க . .

 ரசிக்க சகிக்க . .

*ஏளனமாக* *சிரித்தவர்களும்*
*ஏற்றுக் கொள்ளும்*
*பக்குவத்தில்*
*அடங்கியிருக்கிறது*
*நம் வெற்றியின்*
*சிறு திறவுகோல்.*
*முதலில்
சகிக்ககக்
கற்றுக்கொள்ளுங்கள்.*
*பின்பு தானாக
அனைத்தையும்
ரசிக்கக் கற்றுக் கொள்வீர்கள்.*
*முடிந்து போனதைகக்
கனவாக நினைத்து கொள்.*
*நடக்கப் போவதை
வாழ்க்கையாக எடுத்து கொண்டால் வாழ்க்கை சிறக்கும்.*
கவலைப் படுவதன் மூலம்
எதையும் மாற்ற முடியாது.
ஆனால் இறைவன் மீது
நம்பிக்கை வைப்பதன் மூலம் எதுவும் மாறலாம்.
அத்தகைய மாற்றம்
உங்கள் கண் இமையை மூடித் திறக்கின்ற நேரத்திலும் நடக்கலாம்.
எதிர்காலம், வாழ்க்கையைப் பற்றிய உயிர்போகும் கவலை இவற்றை எல்லாம் நினைத்துப் புலம்பாதீர்கள். உங்கள் இறைவழி
வாழ்க்கைப் பயணத்தில் எந்தத் தடையும் வராது.
இறைவன் மீது
பக்தி கொள்ளும் போது
அனைத்தையும் உங்களுக்குள் இருக்கும் இறைவனே உங்களைப் பாதுகாத்துக் கொள்வார்.
அத்தகைய பாதுகாப்பில் இறைவனைத் தாண்டி, அவரின் அனுமதியின்றி எதுவும் நேராது,
அமைதி கொள்ளுங்கள்.
*பேருந்து பயணத்தில்* *நடத்துனர் கொடுக்க வேண்டிய மீதி*
*சில்லறைக்காக முழுப் பயணத்தையும்* *ரசிக்க மறக்கிறோம்....*
*அப்படித் தான் வாழ்க்கையிலும்*
*சில சில்லறைப் பிரச்சனைக்காக
முழு வாழ்க்கையையும்
ரசித்து வாழ மறந்து விடுகிறோம்.*

No comments:

Post a Comment