Thursday 28 December 2023

மனசும் மனசாட்சியும் . .

 மனசும் மனசாட்சியும் . .

தவறான செய்திகள்,
காழ்ப்புணர்ச்சி,
கசப்பு, வெறுப்பு செய்திகள்,
கிசு கிசுக்கள், எதிர்மறை செய்திகள், ஆபாசங்கள், வதந்திகள், நீங்க நம்புனாலும் சரி நம்பாகாட்டியும் சரி, வேணும்னு சொன்னாலும்
வேண்டாம்னு சொன்னாலும்,
நம் கண் முன்னே வந்து நிற்கும், காதினுள் செல்லும்,
நம் இதயமும் அதை விரும்பும்.
இப்படிபட்ட செய்திகள்
நம் கண்களில் படுவது மேலே பறக்கின்ற பறவைகள் போல. அதை நம்மால் தடுக்க முடியாது.
ஆனால்
அது நம் தலையில்
கூடு கட்டுவதைத் தடுக்கலாம்.
அது தான் நம் எண்ணத்தை இந்த செய்திகள் கறைபடுத்தாமல் தவிர்ப்பது. நம் எண்ணங்களை பாதித்து அதிலே திளைக்காமல் உடனே வெளி வருவதற்கான பிரயாசத்தை
நாம் தான் எடுக்க வேண்டும்.
இது எப்படி என்றால் ஆழமான ஒரு ஆற்றிலே அடித்து செல்லப்படுவதைப் போன்றது, நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் நீரோட் டத்தின் திசையில் அடித்து செல்லப்படுவீர்கள், எதிர் நீச்சல் செய்தால் தான் குறைந்த பட்சம் அதே இடத்திலாவது இருக்க முடியும்.
உண்மைதான், நேர்நிலை எண்ணங்கள், மற்றும் செய்திகளை நாம் தான் தேடிச் செல்ல வேண்டும்.
எதிர்மறைச் செய்திகளை விட்டு வெளியே வர வேண்டும் என்றால் நேர்நிலை எண்ணங்கள் மற்றும் செய்திகள் தேடிக் கண்டுபிடிக்க நாம் சிறிது முயற்சி எடுக்கத் தான் வேண்டும்.
நாம் எவற்றைக் கேட்கிறோமோ
அது தான் நம்மை உருவாக்கக்கூடியது, உருமாற்றக் கூடியது.
ஆகையால்
*நம் மனசையும்
மனசாட்சியையும்
எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வோம்.*

No comments:

Post a Comment