Friday 8 December 2023

சிந்தனை வளம் சிறக்கட்டும்

 சிந்தனை வளம் சிறக்கட்டும் . . .

ஒரு அறிஞரிடம்
வெற்றிக்கு எது முக்கியக் காரணம் என்று கேட்கப்பட்டபோது,
அவர் சொன்ன பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் மக்கள் யதார்த்த உண்மை என்று சொல்லி வந்த விஷயங்கள் தற்காலிகமானவை.
பல சமயங்களில் தவறாகவும் இருந்து இருக்கிறது. நீங்கள் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பது உண்மையல்ல. பூமி சுழன்று கொண்டிருப்பதால் கிழக்குத் திசையில் மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். பூமி சூரியனையும் சுற்றி வருவதால் மணிக்கு இரண்டாயிரம் மைல் வேகத்தில் இன்னொரு திசையிலும் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
தவிர சூரியன்
தன்னுடைய பாதையில் சுற்றிக் கொண்டிருப்பதால் மணிக்கு பதினைந்தாயிரம் மைல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள். இவை எல்லாம் யதார்த்த உண்மைகள். ஆகவே "நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருப்பதாக எண்ணுவது தவறான கணிப்பு.''
சும்மா உட்கார்ந்திருக்கும் விஷயத்திலேயே இப்படிப்பட்ட தவறுகளை நாம் செய்கிறோம் என்றால், சாதனை புரிவதற்குள்ள நம்முடைய ஆற்றல் பற்றியும் நமக்கு எத்தனையோ தவறான கணிப்புகள் இருக்கக்கூடும். நம்மிடம் சில நம்பிக்கைகள் உருவாகக் காரணமாக இருந்த எத்தனையோ தகவல்கள் தவறானவை என்பதில் சந்தேகம் இல்லை.
சுய சிந்தனையின் மூலம் நம்முடைய பழைய நம்பிக்கைகளை நாம் பரிசீலிக்க முடியும். அவ்வாறு பரிசீலித்தால் நம்முடைய பழைய நம்பிக்கைகள் எவ்வளவு பலவீனமானவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
உதாரணமாக ஒரு பெரிய கூட்டத்தின் முன்னால் நின்று உங்களால் சொற்பொழிவாற்ற முடியாது என்று நீங்கள் நினைக்கலாம். இந்த நம்பிக்கையினை நீங்கள் மாற்றிக்கொண்டு விட்டால் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய காரியங்களையும் உங்களால் நிறைவேற்ற முடியும்.
உதாரணமாக, பள்ளிப் பருவத்தில் ஒரு விஷயம் திரும்பத் திரும்ப உங்களுக்கு சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். பள்ளிக் கூடத்தில் நீங்கள் சிறப்பாகச் செயல்படாவிட்டால் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட முடியாது என்று சொல்லுவார்கள். பள்ளிக் கூடத்தில் ஒருவேளை நீங்கள் சராசரி மாணவராக இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
மேலே சொன்ன உபதேசத்தைக் கேட்கும் நீங்கள், வாழ்க்கையிலும் சராசரியாகத்தான் வாழ முடியும் என்கிற நம்பிக்கையினை உருவாக்கி கொண்டு விடுகிறீர்கள்.
அதனால் உயர்ந்த சாதனைகள் புரியும் எண்ணம் உங்களுக்கு வராமல் தடைபட்டுப் போகிறது.
ஆனால் ஆராய்ச்சிகள், பள்ளியில் வெளிப்படுகின்ற கெட்டிக்காரத்தனத்துக்கும்
வாழ்க்கை வெற்றிக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவு படுத்துகின்றன.

No comments:

Post a Comment