Monday 10 July 2023

கண்டனூரில் நடைபெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு செல்லாயி அம்பாள் கோவிலில் நடைபெற்ற திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் இரவு நடைபெற்ற, மனிதத்தேனீ நடுவராகப் பல்லாயிரம் மக்கள் பங்கேற்று அமர்ந்து கேட்ட பட்டிமன்றம்.

 நேற்று சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் நடைபெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு செல்லாயி அம்பாள் கோவிலில் நடைபெற்ற திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் இரவு நடைபெற்ற, மனிதத்தேனீ நடுவராகப் பல்லாயிரம் மக்கள் பங்கேற்று அமர்ந்து கேட்ட பட்டிமன்றம்.

947 நகரத்தார் புள்ளிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டம் கண்டனூர்.
இளைஞர்களின் வாழ்க்கையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிப்பது வீடா அல்லது நாடா என்ற தலைப்பில் மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் பள்ளத்தூர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் நடுவராகப் பங்கேற்றிட
வீடே என்ற அணியில் கொப்பனாபட்டி மலர்விழி பழனியப்பன், நாட்டரசன்கோட்டை நாச்சாள் குழந்தைவேலன், கண்டனூர் மெ. நாராயணன் பேசினர்.
நாடே என்ற அணியில் புதுவயல் சி எஸ். விசாலாட்சி, கண்டனூர் பழ. பழனியப்பன், காரைக்குடி
மெ. ஜெயம்கொண்டான் பேசினர்.
சரியாக இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தப் பட்டிமன்றத்தில் வீடும் நாடும் இரு கண்கள், வீடு மகிழ்வாக நிம்மதியாக பாதுகாப்பாக இருந்தால் தான் நாடு சிறப்பாக இருக்கும்.
வீடும் நாடும் சிறக்க இளைஞர்கள் பெற்றோரைப் பேணிக் காக்கவும் உறவுகளை அரவணைக்கவும் வேண்டும்.
இந்திய இளைஞர்கள் குறித்து மேல் நாடுகள் வியந்து பாராட்டுகின்றனர்.
உலகின் உயர்ந்த மொழியான, தாய்மொழிகளின் தாய் மொழியான நமது செம்மொழித் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் நிகழ்வாக நடைபெற்ற இந்தப் பட்டிமன்றத்தில் பல கருத்துகளை நடவு செய்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுக் கேட்டு மகிழ்ந்த இந்தப் பட்டிமன்றத்தில் இளைஞர்களின் வாழ்க்கையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிப்பது வீடுதான் என நடுவர் மனிதத்தேனீ தீர்ப்பு வழங்கினார்.
காலையில் நடைபெற்ற திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்று வணங்கினர்.
பொது விருந்து இரண்டு நாட்கள் நடைபெற்றது.
விழாவில் நடப்புக் காரியக்கார்கள் எஸ்பி. மாணிக்கம் என்ற அழகப்பன், கேஎம். முருகப்பன், வயி. காசி மற்றும் ஆர்எம். வயிரவன், நா. சுப்பிரமணியன் (சூப்பர் சுப்பு), பிஎல். அண்ணாமலை, கேடிஆர். கருப்பையா என்ற ராஜா, கவிஞர் செல்லக் கணபதி,அக்னி நாச்சியப்பன், ஆர்எம் . கண்ணன் (பிஞ்சு), சீமான் கண்ணப்பன் சுப்பு, ராம. சின்னையா, மீசை நாச்சியப்பன், பில்லா நாச்சியப்பன், மோகனா, வசந்த விலாஸ் அடைக்கப்பன், அரசி முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
வாழிய இறைப்பணி வாழியவே.
























































No comments:

Post a Comment