Monday 17 July 2023

இரவும் பகலும்

 இரவும் பகலும் . .

*வாழ்ந்து காட்ட வேண்டும்
என்கிறார்கள்
வாழவேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். *
*அதை ஒருவரிடமும்
காட்ட வேண்டுமென
ஒரு அவசியமும் இல்லை*
*நான் கடலுக்கடியில்
சும்மா ஒரு தாவரம் போலக்கிடப்பேன்*
*எனக்கும்
யார் வாழ்க்கையைப் பார்த்தாலும்
அது அவர்களுடைய வாழ்க்கை
என்பதைத் தவிர எந்தச் சலனமும் உண்டாவதில்லை.
குறிப்பாக மகிழ்ச்சியாக இருப்பவர்களைக் கண்டு எனக்கு ஆத்திரம் உண்டாவதில்லை..*
*ஒவ்வொரு இரவும் ஒரு பகலை நோக்கியே பயணிக்கிறது.*
*வாழ்வில்
இருள் என்பது நிரந்தரம் இல்லை*
*இன்றைய நாள் உங்களுக்கு நல்லவற்றைச் செய்திருந்தால்
இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்*
*ஒருவேளை சோதனைகள் சூழ்ந்து இருந்தால்
நம்பிக்கையுடன் இருங்கள்*
*இன்று என்பது முடிவு அல்ல*
*நாளை என்ற புதிய நாள் உங்களுக்காகக் காத்திருக்கிறது*
*அதிசயங்களும் அற்புதங்களும்
எந்த நொடியிலும் நிகழலாம்
நம்புங்கள்*
*மிகச் சிறப்பாக வாழ்வீர்கள். *

No comments:

Post a Comment