Friday 7 July 2023

மன அழுத்தம் இன்றி வாழ்தல்.

 மன அழுத்தம் இன்றி வாழ்தல்.

மனது வலிக்கும் போது வாழ்க்கை புதிதாக ஒன்றை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது எனறு அர்த்தம்.
நீங்கள் செய்த கெட்ட விஷயங்கள் உங்களை உறுத்துவதை விட, தகுதியற்றவர்களுக்கு நீங்கள் செய்த நன்மைகள் அதிகமான உறுத்தலைக் கொடுக்கும்.
அறிவு (கல்வி) அதிகாரத்தைத் தான் கொடுக்கும்,
சுபாவம் (நடத்தை) தான் மரியாதையைக் கொடுக்கும்.
நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அடுத்தவர் தன் தேவையும் மனநிலையையும் வைத்தே உங்களை எடைபோடுவார்.
நம் வாழ்க்கை மற்றவர்களை உற்சாகப்படுத்த மட்டும் கிடையாது.
எல்லோரும் நல்லவர்களைத் தேடுகிறார்கள், ஆனால் யாரும் நல்லவராக இருக்க விரும்புவதில்லை.
உணர்வுகளை விட புத்தியை வலிமையாக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
கடின உழைப்பு மட்டும் போதும் என்றால் கழுதைகள் எல்லாம் எப்பொழுதோ பணக்காரனாகியிருக்க வேண்டும்.
எனக்கு நான் அரசன் என வாழ வேண்டும், இல்லையேல் அரசன் எவனாக இருந்தால் எனக்கென்ன என வாழ வேண்டும்.
கோபம் என்ற நிலையில் தான் புத்தியை விட நாக்கு வேகமாகச் செயல்படும். அதுவும் பெருநஷ்டத்தைத் தான் கொடுக்கும்.
வலிமையுள்ளவன் கடக்கும் பாதை கண்டிப்பாக எளிமையான ஒன்றாக இருக்காது.
பணம் மற்றும் புகழ் கொண்டு வாழ்வதை விட, கவலை மற்றும் மன அழுத்தம் இன்றி வாழ்வதே சிறந்தது.
அடுத்தவரின் ரகசியங்களைக் கூறும் நபரை எக்காலத்திலும் நம்பவேண்டாம்.
மன உறுதியை வளர்க்க வேண்டுமானால் தனிமையிலும் மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவர் பதில் அளிக்கவில்லை என்பதால், அவர் கவனிக்கவில்லை என்று அர்த்தமில்லை.
அடுத்தவர் வெகுமதி தரவில்லை என்பதற்காக உங்களின் சிறந்த செயலை நிறுத்தாதீர்கள்.
நீங்கள் தான் பிரச்சனை,
நீங்கள் தான் தீர்வு.
வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு, நீங்கள் ஆட்டத்தை ஆடுபவரா
இல்லை
பொம்மையா என நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
சத்தம் வலிமையென்பதும், அமைதி பலவீனமென்பதும் சுத்தப் பொய்.
மெழுகுவர்த்தியை வாங்க சூரியனை விற்றுவிடக் கூடாது.
நீங்கள் தான் நீங்கள் மட்டும் தான் உங்களின் மகிழ்ச்சிக்குப் பொறுப்பு, வேறு யாரும் கிடையாது.
கடைசிகட்டத்தில் எல்லாம் சரியாகிவிடும்.
எல்லாம் சரியாகவில்லை எனில் அது கடைசிகட்டம் அல்ல.

No comments:

Post a Comment