Monday 24 July 2023

மகிழ்ச்சி.

 மகிழ்ச்சி.

*சில நேரங்களில் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பது நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் அனைத்தையும் அனுபவிக்கும் பொழுது புரிவதில்லை.*
*அது இல்லாத நேரங்களில்
தான் உணர முடியும்.*
*ஆகவே ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும் நன்றி உணர்வோடு இருங்கள்.*
*இல்லாததை நினைத்து ஏங்காமல், குறைகளை மட்டும் காணாமல்
அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள்.*
*நம்மைச் சுற்றி எத்தனையோ நபர்கள் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஒன்றைப் பெற போராடிக் கொண்டிருக்கிறார்கள்.*
*நீங்கள் அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்ல மறக்காதீர்கள்.*
*நன்றி உணர்வோடு வாழும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை சொர்க்கமாகும்.*
*இறை அருளால்
உங்கள் வாழ்க்கை வளமாகட்டும்.*
*இந்த உலகம் மிகப்பெரிய கல்விக்கூடம் என்பதை மறுக்கயிலாது...*
*நிஜ வாழ்க்கை முதல் இணையதள வாழ்க்கை வரை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதர்களையும் கொண்டு நிறைய நிறையவே பாடம் போதிக்கின்றது.*
*மகிழ்ச்சி என்பது
கடினமானதை இலகுவாகவும், சுமையானதை லேசாகவும் ஆக்குகிறது*
*நம்பிக்கையே இல்லாத ஒரு தருணத்தில் அந்த அதிசயம் நடக்கலாம்,
நடக்கும்.
அதுதான் இந்த சுவாரசியமான வாழ்க்கை.*
*தண்ணீரைப் போல இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஏனென்றால்
அதற்கு ஒதுங்கிப் போகவும் தெரியும்.
அடித்துக் கொண்டு
போகவும் தெரியும். *

No comments:

Post a Comment