Monday 17 July 2023

அனுபவங்களை விரிவு படுத்துங்கள்.

 அனுபவங்களை விரிவு படுத்துங்கள்.

நீங்கள் இன்று செய்யும் வேலை இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்.
வாழ்க்கையில் ஒருநாள் என்பது அவ்வளவு முக்கியமானதா என கேட்பவரா நீங்கள், இன்று ஒருநாள் போனால் என்ன, இன்னும் என் வாழ்நாளில் தான் ஆயிரக்கணக்கில் நாட்கள் உள்ளதே என ஒருநாளை சாதாரணமாக நினைப்பவரா, அப்படியென்றால் இது உங்களுக்கான பதில் தான்.
ஒருநாளை ஒரு நாள் என்று பார்க்காதீர்கள், 24 மணி நேரம், 1140 நிமிடம், 86,400 நொடி இப்படிப் பார்த்துப் பழகுங்கள் எவ்வளவு பெரிதாக உள்ளது. இப்போது இதையே ஐந்து வருடங்கள் என்று பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு தலை சுற்றும், ஆனால் இந்த ஐந்து வருடங்கள் சிறப்பாக இருக்க உங்களது ஒரு நாள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தாலே போதும், நீங்கள் தினசரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில வழிகள் இதோ.
1. உங்கள் அனுபவங்களை
திசை மாற்றிக் கொண்டே இருங்கள்.
உங்கள் அனுபவங்களை ஒரு விஷயத்தை நோக்கியே கொண்டு செல்லாதீர்கள். உங்கள் அனுபவங்களை திசை மாற்றிக் கொண்டே இருங்கள். உங்கள் அனுபவங்களை விரிவுபடுத்துங்கள். இது உங்களது புதுமையான ஐடியாக்களுக்கும், நல்ல முறையில் உங்களை மக்களோடு தொடார்புபடுத்திக்கொள்ள உதவும்.அந்த அனுபவத்தை உலகிற்கு பரிமாறுபவராக இருங்கள்: அது பலரை முட்டாள் தனத்திலிருந்து விடுவிக்கும்.ஒரு சிறந்த அனுபவம் நல்ல சிந்தனையாளனை
உருவாகியே தீரும்.
2. அவமானத்தோடும், சந்தேகத்தோடும் வேலை பார்க்கப் பழகுங்கள்.
அனைவரும் ஏதோ ஒரு சூழலில் அவமானத்தையும், சந்தேகத்தையும் எதிர்கொண்டு இருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே இதை சமாளிக்க கற்றுக்கொண்டு இருப்பார்கள். இதனை சமாளிக்க பழகுங்கள். உங்கள் அவமானம் பாடத்தையும் கற்று கொடுக்கும், உங்கள் மீதுள்ள சந்தேகம்
உங்களைத் தெளிவு படுத்தும்.
3. வெளிச்சூழலுக்குச் செல்லுங்கள்:
உள்ளேயே இருந்து வேலை பார்ப்பது எளிது. வெளிச்சூழலுக்குச் செல்லுங்கள். மிக உயரமான பகுதிகளுக்குச் சென்று வாருங்கள், உளவியலாலர்களைச் சந்தியுங்கள். அது உங்களுக்குள் உள்ள புதுமையற்ற சதாரண மனிதனை புதுமைபடுத்துவதுடன்,உங்கள் அழுத்தத்தைக் குறைக்க உதவும் கருவியாகவும் அமையும்.
4. .உங்களைவிட வித்தியாசமானவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
நீங்கள் சற்று தாராளமானவராக இருந்தால் வித்தியாசமான மனிதர்களின் நட்புக்குள் செல்லலாம். நீங்கள் நகரத்து எலியாக இருந்தால் நாட்டு எலியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்தத் தேடல் நீங்கள் பல வித்தியாச மனிதர்களை அடையாளம் காட்டும். அவர்கள் மீதான புரிதல் மாறுபட்ட மனிதர்கள் உள்ள குழுவில் சரியான முடிவை எடுக்க பயனளிக்கும்.
5. குறைந்தபட்ச குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்:
ஒரு நாளைக்கு 15 பக்கங்கள் படிக்க வேண்டும், 20 புஷ்-அப்கள். இப்படி குறுகிய டார்கெட்டுகள் உங்களை பெரிய வேலைகளுக்குப் பழக்கப்படுத்தும், இந்தப் பயிற்சி பெரிய திட்டங்களை உடைத்து சிறிது சிறிதாக ஒரு நாளைக்கு எவ்வளவு என பிரித்துக் ஐந்து வருட திட்டத்தையும் ஒரு நாளைக்கு பிரித்து வெற்றியடைய உதவும்.
இன்னும் ஐந்து வருடம் கழித்து எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க தொடங்கிவிட்டால் இன்று உங்கள் வேலை என்னவெனில்.
உங்களுக்கான வேலை என்ன என்பதை இன்னோருவரைத் தீர்மானிக்க விடாமல் இருப்பது தான். இன்றைய நாளை உங்களுக்குப் பிடித்த மாதிரி செதுக்குங்கள் அது இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்.

No comments:

Post a Comment