Wednesday 12 July 2023

மறக்க முடியாத கவிஞன் முத்துக்குமார்..

 









மறக்க முடியாத கவிஞன் முத்துக்குமார்..
சின்ன காஞ்சிபுரம், அறிஞர் அண்ணாவின் வீட்டுப் பக்கம் போகும் போதெல்லாம் தம்பி பாடலாசிரியர் முத்துக்குமாரின் நினைவுகள் தலைதூக்கத்தவறாது.
ஒரு காலத்தில் ஞாயிறு சாயந்திரமானா, திராவிட நாடு ஆபிஸ் அருகே ஒரு கையேந்திபவன் பக்கம் சினிமா கனவுக ளோடு அவுங்க செட் சகிதமமாய் நிறையவே பேசுவார் தம்பி..
கொஞ்சம் விரக்தியாக பேசும்போது அவர் வாயிலிருந்து வரும் வார்த்தை கள் கிட்டத்தட்ட கண்ணதாசனை நினைவுபடுத்தும்.
''பொண்டாட்டி நகையை வித்து கவிதை புஸ்தகம் போட்டு பாக்க வர்றவனுக்கெல்லாம் விசிட்டிங் கார்டா குடுத்துக்கிட்டு இருக்கேண்ணா''
ஊருக்கு பெருமை சேர்த்துவிட்டு இவ்வளவு சின்ன வயதில் போய் சேருவார் என்று நாங்கள் யாருமே நினைக்கவேயில்லை..
வாரத்திற்கு இரண்டு முறையாவது காலை லயோலா கல்லூரி வாசல் பக்கம் சந்திப்போம். சினிமா கனவுகளோடு முத்துக்குமார் போராடிக் கொண்டிருந்த காலம் அது.
பின்னாளில், போனில் பேசிய சில சந்தர்ப்பங்களில் நாம் தவறாமல் கேட்கும் ஒரே கேள்வி.. ஏன்யா வாய் விட்டு சிரிக்க வேமாட்டீயா.. எந்த போட்டோவுல பார்த்தாலும் சோகமாவே தெரியறயே? என்பதுதான்.
முத்துக்குமார் பெரும்பான்மையான நேரங்களை கழித்தது காஞ்சிபுரம் ஜோதி புக் ஸ்டாலில். கடைக்குச் செல்ல பிள்ளை மாதிரி என்பதால் அனைத்து புத்தகங்களையும் படித்துவிட்டு கலகலவென்று பேசுவார்.
தமிழர்களின் உலகமே போற்றும் திரைப் பாடல் ஆசிரியராக உயர்ந்த பிறகு, இந்த கலகலப்பு எங்கே போனது என்பது தான் தெரியவில்லை.
காஞ்சிபுரத்தில் நடந்த முத்துக்குமார் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நாம் பேசியபோது காஞ்சிபுரத்தில் ஏதாவது ஒரு வீதிக்கு கவிஞன் முத்துக்குமாரின் பெயரை சூட்டுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். வழக்கம்போல் யார் காதிலும் ஏறவில்லை.
41 வயதிலே இயற்கை வசம் போனவர் இன்று இருந்திருந்தால் 49 பிறந்தநாளை கொண்டாடியிருப்பார்..

No comments:

Post a Comment