Wednesday 19 July 2023

குழந்தையைப் போல செயல்படுங்கள்.

 குழந்தையைப் போல செயல்படுங்கள்.

*"நான் ஒன்றை மட்டும் அறிவேன்.
நான் எதையும் அறிந்திருக்கவில்லை என்பதை"* - சாக்ரடீஸ்
எதையும் அறிந்திராத நிலையில் இருந்து கொண்டு செயல்படுங்கள். மிகப் பெரிய பரவசமூட்டும் அனுபவங்களை அது உங்களுக்கு வழங்கும். காரணம் எதையுமே அறிந்திராதவர் வியக்கும் திறனுடையவராக இருப்பார். தம்மை அறியாதவராய் காட்டிக்கொள்பவர் மரியாதை கலந்த அச்சத்தை உண்டு பண்ணுவார்.
ஒரு ரோஜா மலரைக் கண்டதுமே அவரால் ஆடமுடியும்.
நட்சத்திரங்களால் நிரம்பிய வானம் அவரைப் பாடத் தூண்டும். அவர் பிரபஞ்சத்தோடு தம்மைப் பொருத்திக் கொள்கிறவர். நிலவைக் கண்டதும் அவர் பெருமகிழ்ச்சி கொண்டு விடுவார். -காரணம் அவர் எதையும் அறிந்திருக்கவில்லை.
மிகச சாதாரணமானவையும் அவருக்கு அசாதாரண மானவையாகி விடும். காரணம் ஒவ்வொன்றும் அவருக்குப் புதிதாகத் தெரியும்.
ஒவ்வொன்றுமே புரிந்துகொள்ள முடியாததும் விளக்கம் காண முடியாததுமான மறைபொருள்தான். உங்கள் அறிவில் உங்களுடைய அறிவின்மை (அறியாமை)யை நீங்கள் மறைத்துக்கொள்ள முடியும். அதே சமயம் மற்றவர்களை வியப்பிலாழ்த்தும் திறனை நீங்கள் இழந்து விடுவீர்கள். அறிவு இறைமையுடன் இணையும் பண்பை அழித்துவிடும்.
எனவேதான். காலகாலமாக மறைஞானிகள் ஒரேயொரு விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள்: 'அறிவை விடுங்கள். எல்லா அறிவும் தேவையற்ற குப்பை' என்று.
அறிந்திராத நிலையில் இருங்கள். அந்த நிலையில் இருந்த கொண்டு செயல்படுங்கள்
ஒரு குழந்தையைப் போல்.

No comments:

Post a Comment