Friday 21 July 2023

நேர்மை.

 நேர்மை.

*உன் பெயரால்
அறிமுகம் செய்வதை விட,
உன் செயலால்
அறிமுகம் செய்து கொள்,
இந்த உலகம் என்றும் உன்னை மறக்காது.*
*படிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் புத்தகமும்
ரசிக்கத் தெரியாதவர்
கையில் இருக்கும் வாழ்க்கையும் வீணாகித் தான் விடுகிறது.*
*கேட்பவை எல்லாம் கிடைத்து விட்டால் ரசனை இருக்காது.*
*கிடைத்தவை எல்லாம் நிலைத்து விட்டால் கேட்பதற்கு எதுவும் இருக்காது.*
*ஒருவருக்கொருவர் கருணை காட்டுங்கள், ஊக்கப்படுத்தும் வகையில் ஓரிரு வார்த்தைகள் சொல்லுங்கள்.
அனைத்தையும் விட இதுவே இக்கால கட்டத்தில் அநேகப் பேருக்கு அவசியமானது.*
*ஏதாவது நல்லவைகள் செய்யும் போது யாராவது அவமானப் படுத்தினால்
அந்த அவமானங்களை
எண்ணிக் கலங்காதீர்கள்.*
*அழகான வாழ்க்கைக்கு அடித்தளமே அவமானங்கள் தான்.*
*பிழைகளும் தோல்விகளும் இல்லாமல் கற்றல் ஒரு போதும் நிகழ்வதில்லை.*
*ஆற்றல் நிறைந்தவனாக
இருப்பதைக் காட்டிலும்
நேர்மையானவனாக இருப்பது
மேலானது.*
*வெறுப்பவர்களிடம்
இருந்து ஒதுங்கி நில்லுங்கள்.*
*உங்களைச் சிறந்தவர்களாக
செதுக்கி கொள்ளுங்கள்.*

No comments:

Post a Comment