நம்மை பாதிக்காத
இன்ப துன்பங்கள் . .
மனிதமனம் பெரும்பாலும் போராட்டத்திலேயே இருக்கிறது.
பலரும் சின்னச் சின்ன விஷயங்களுக்காகக் கூட போராடிக் கொண்டிருக்கிறார்கள். மனதில் துயரம் இருக்கிற வரைக்கும் இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நாம் சில விஷயங்களை வேண்டும், வேண்டாம் என்று சொல்லும் போதே நம் மனதில் சில எதிர்பார்ப்புகள் தொடங்கி விடுகின்றன. எதிர்பார்ப்பு உண்டாகும்போது வாழ்வில் விருப்பு, வெறுப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
ஒரு மனிதர் தான் எண்ணுவது சரி என்று உணர்ந்து, மிக அமைதியாக இருப்பாரேயானால் அவர் இறைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர். அவர் வீண் விவாதங்கள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றில் சிறிதும் ஈடுபடமாட்டார்.
மனிதர்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பது என்பது என்றோ எப்போதோ நிகழும் அனுபவம் என்று எண்ணுகிறார்கள். அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி இருக்கிறது. அன்பும், ஆனந்தமும் நிலையான உணர்வாக நம்மிடத்தில் இருக்க வேண்டியவையாகும்.
No comments:
Post a Comment