Monday 27 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*உதவி செய்ய எல்லோராலும் முடியும். ஆனால் கேட்பவரின் தேவையை அறிந்து அதற்கு தக்கவாறு உதவி செய்வது தர்மத்தைவிட பல மடங்க புண்ணியம் தரக்கூடிய கொடையாகும்.*
எதையுமே இல்லை என்று சொல்லாமல்,
கேட்பவர்களுக்கு வாரி வழங்கி வந்ததாலும்,
தர்ம நெறியை கைவிடாது
கடைப்பிடித்ததாலும் தானே
பஞ்சபாண்டவர்களில் தர்மத்திற்கு
உதாரணமாக தர்மரைக் கூறுகிறோம். ஆனால்,
தருமரை விட கர்ணனையே பெரிய
கொடையாளி என்று ஏன் இன்று வரையிலும்,
தர்மம் செய்வதற்கு கர்ணனை உதாரணமாகச்
சொல்லி, தர்மரை மறந்து விட்டோம்?
இந்த கேள்வி ஒரு முறை அர்ஜூனனின்
மனதில் எழுந்தது. 'கிருஷ்ணா ... கர்ணனைப்
போன்றே என்னுடைய அண்ணன் தர்மரும்
யாருக்கும் எதையும் இல்லை என்று
சொல்லாமல் தர்மம் செய்பவர் தானே?
இரண்டு பேருமே எதையும் இல்லை என்று
சொல்லாமல் கொடுப்பவர்கள் தான். அதிலும்
மாற்று கருத்தில்லை. ஆனால், கர்ணனுக்கு
மட்டும் ஏன் தர்மரை விட அதிகமான அளவு
புகழ்?" என்று கேட்டான்.
*༺🌷༻*
அர்ஜூனனுக்கு கர்ணனின் கொடை
உள்ளத்தை நேரில் புரிய வைக்க நினைத்த
கிருஷ்ணர், 'சரி, என்னுடன் வா, காட்டுகிறேன்'
என்று சொல்லி தன்னுடன் அர்ஜுனனை
அழைத்துச் சென்றார். மகரயாழ் இருவரும்
பிராமணர்களைப் போல வேடமிட்டுக்
கொண்டு தருமரின் அவைக்குச் சென்றார்கள்.
அந்தணர்களைப் பார்த்த தருமர் அகமகிழ்ந்து,
என்ன வேண்டுமென்று கேட்டார்."யாகம் நடத்த
சந்தனக் கட்டைகள் வேண்டும்" என்றார்கள்.
*༺🌷༻*
மன்னர் தருமர் உடனே சந்தன மரங்களை
வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை
நாடு முழுவதும் அனுப்பினார். ஆனால்
அப்போது மழைக்காலம். கொண்டு வந்த
மரங்கள் எல்லாம் ஈரமாகி இருந்தன.
அவற்றைக்கொண்டு யாகம் நடத்த முடியாது.
என்ன செய்வது என்று திகைத்து நின்ற
தர்மரிடம் விடைப்பெற்றுக் கொண்டு இருவரும்
கர்ணனிடம் சென்று அதே கோரிக்கையை
வைத்தார்கள்.
கர்ணன் யோசித்தான். "அடாடா... இது
மழைக்காலம் ஆயிற்றே. இந்த
மழைக்காலத்தில் காய்ந்த கட்டைகள்
கிடைப்பது சிரமமாக அல்லவா இருக்கும்.
அதனால் என்ன... கொஞ்சம் பொறுங்கள்"
என்றான். உள்ளே சென்று ஒரு கோடரியை
எடுத்து வந்தான். மாளிகையின் கதவுகளும்
சன்னல்களும் சந்தன மரத்தால்
செய்யப்பட்டவை. கர்ணன் அவற்றை வெட்டி
எடுத்துக் கொடுத்தான். இருவரும் திரும்பி
வரும் போது கிருஷ்ணர் கேட்டார்.
*༺🌷༻*
"இப்போது புரிகிறதா அர்ஜுனா... தருமரிடம்
கதவையும் ஜன்னல்களையும் உடைத்துத்
தாருங்கள் என்று கேட்டிருந்தால் அவரும்
உடனே தந்திருப்பார் தான். ஆனால், அவர்
தானாகவே அவ்வாறு சிந்திக்கவில்லை.
ஆனால் கர்ணன்... நாம் கேட்கவே இல்லை .
அவனாகவே யோசித்துச் செய்தான். தருமர்
பிறருக்கு கொடுப்பது, யாராவது கேட்டால்
இல்லை என்று சொல்லக்கூடாது என்பது
அவருடைய தர்மம் என்பதால். ஆனால்,
கர்ணன் கொடுப்பது, தர்மம் செய்வது
அவனுடைய விருப்பம் என்பதால் கேட்டுக்
கொடுப்பது தர்மம், கேட்பவரின் தேவையை
அறிந்து அதற்கு தக்கவாறு கொடுப்பது
தர்மத்தைவிட பல மடங்க புண்ணியம்
தரக்கூடிய கொடையாகும். அதனால் தான்
தான தர்மங்களைச் செய்வதில் கர்ணனை
மிஞ்சியவர் யாருமில்லை என்று மக்கள்
போற்றுகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment