Wednesday 29 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தமிழ்நாட்டுல முஸ்லிம்கள், கிருஸ்டின்கள் இவ்வளவு அட்டகாசம் பண்ணிட்டிருக்காங்களே… மோதியும் அமித்ஷாவும் என்ன பண்ணிட்டிருக்காங்க?
இப்படிக் கேட்பவர்களுக்கு முஸ்லிம் கிருத்துவர்களின் பலம் என்ன பலவீனம் என்னவென்று தெரியவில்லை என்று புரிகிறது. பலம் என்றால், பணம், மற்றும் ஓட்டு என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லாவற்றையும் எழுதினா புத்தகம் தான் போடணும். ஒரேயொரு எடுத்துக்காட்டு மட்டும் சொல்றேன். பொறுமையா படிங்க.
“அன்பாயம்” பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?, குமரி முனையிலிருந்து, அந்தப் பக்கம் திருவனந்தபுரம், இந்தப்பக்கம் திருச்செந்தூர் வரை கடற்கரையிலிருந்து வடக்கு நோக்கிப் பரவி வரும் ஒரு பெரிய புற்று நோய். அன்பு + ஆயம் = அன்பாயம். கிருத்துவக் கட்டமைப்பு. அது பரவியிருக்கும் பகுதிகளில் இந்திய அரசியலமைப்பு வரைபடமெல்லாம் செல்லாது. அவர்களுக்கென்று மாவட்டங்கள் இருக்கு. அதன்படி தான் நிர்வாகம் நடக்கும். நாற்பது குடும்பத்திற்கு ஓர் அன்பாயம் என்பது கணக்கு. ஓர் அன்பாயத்தில் ஒரு தலைவர் / உபதலைவர், ஒரு செயலாளர் / உபசெயலாளர் . அன்பாயத்திற்குக் கட்டுப்பட்ட மக்கள் இந்த நால்வரைக் கேட்காமல் செய்யக் கூடிய விசயங்கள் என்பது, உண்பது, கழிப்பது, கலவுவது மட்டுமே. உடுப்பது கூட சில நேரங்களில் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். வேறு எதுவுமே இவர்களுக்குத் தெரியாமல் / சம்மதம் இல்லாமல் செய்ய முடியாது.
மாத மாதம் மாவட்டப் பேராயர் தலைமையில் ஒரு கூட்டம் நடக்கும். ஒரு மாதம் தலைவர் – உப செயலாளர், அடுத்த மாதம் செயலாளர் – உப தலைவர் கலந்து கொள்வது வழக்கம். உங்க வீட்டுக் குழந்தைகளை எங்கு படிக்க வைக்கணும்?, யாருக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்? எப்ப மீன் பிடிக்கப் போகணும்? யாரிடம் விற்கணும் என்பது வரை அன்பாயத்தின் தலையீடு இருக்கும். மீறினால்? மீறவே முடியாதளவு மூளைச் சலவை செய்திருக்கின்றனர் என்பது ஒரு பக்கம் என்றால், மீறினால், அங்கே வசிக்கவே முடியாது. வெளியேறினால், அதுவரை அங்கே சேர்த்து வைத்திருக்கும் சொத்துகள் எல்லாம் காலி. இதெல்லாம் முரட்டுத்தனமாக நடக்காது. சிரிச்சுட்டே அன்பாக அறுத்துடுவாங்க. தமிழ்நாட்டில் புதிதாக வரும் உயர் ரக கார் / பைக் எல்லாம் சென்னையிலும் கோவையிலும் தான் ஓடுதுனு நினைச்சா, நீங்க தென்கடல் மீனவ சமுதாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் என்பேன்.
உடனே, நமக்குப் பழக்கப்பட்ட கேள்வி ஒன்று சட்டுனு எழும். இதெல்லாம் மத்திய அரசுக்குத் தெரியாதா? உளவுத்துறை சொல்லியிருக்காதா? பொறுங்கள்.
ஒக்கிப் புயல் வந்தது நினைவிருக்கா? அப்ப ஆயிரக்கணக்கான மீனவர்களைக் காணோம் என்று ஒப்பாரி வைத்தார்கள். நிர்மலா சீதாராமன் நேரடியாகக் களத்தில் அங்கே தான் இருந்தார். அவருக்கு ஒரு தகவல் தேவைப்பட்டது. யார் யார் எந்தெந்தப் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றார்கள் என்று. அப்ப தான் புயலின் வேகத்தில் எப்படி சிக்கி எங்கே ஒதுங்கியிருப்பார்கள் என்று கணிக்க முடியும் என்று மீட்புப்படையினர் கேட்டது. ம்ம்ஹும் வாயைத் திறக்கலையே? இறுதியாக கடலுக்குச் செல்லும் முன் படகுக்கு டீஸல் போட மானிய டோக்கன் வாங்கியவர்கள் லிஸ்ட் கேட்டார் நிர்மலாம்மா. கேட்டதே அன்பாயத்திடம் தான். ஆனால், எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லைனு முழு பூசணிக்காயையும் சுண்டைக்காய்க்குள் அமுக்கிக்கிட்டானுக. ஒக்கிப் புயலின் பொழுதே ஒரு பதிவு போட்டிருந்தேன். இனி இவனுக செத்தாய்ங்கடானு.
நடந்த தகவலும் அன்பாயத்தின் கட்டமைப்பையும் முழுவதும் மத்திய அரசு ஸ்கேன் பண்ணியிருக்கும். உடனே அதனைக் கலைக்கவோ, ஒடுக்கவோ நிச்சியமாக முடியாது. காரணம் இது சில பத்து வருடங்களாகக் கட்டமைக்கப்பட்ட அமைப்பு அல்ல! இருநூறு வருடங்களுக்கு மேலாக, மெல்ல மெல்ல படிப்படியாகக் கட்டமைக்கப்பட்டது. ஒரு புதிய சமூக ஒழுங்கையே கட்டமைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அவர்கள் ஒரு தனி நாட்டவர்கள். அதுவுமில்லாமல், அந்த பலத்துடன், உள்ளூர் அலுவலக அதிகாரிகள் முதல் மாநில- மத்திய அரசு வரை அதிகாரங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்கள்.
சரி அவர்கள் பாட்டுக்கு அவர்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டுப் போகட்டுமே இதில் என்ன தவறு? இந்தப் புற்று நோய் மெல்ல மெல்ல வளர்ந்து தனிநாடு கேட்பதில் வந்து முடியும். இதெல்லாம் இன்னும் பத்து வருடங்களில் இல்லை. இன்னும் நூறு வருடம் காத்திருக்கத் தயார். ஆனால், பிடித்து வைத்திருக்கும் நிலத்திலிருந்து ஒரு துகள் மணலை மீட்க முடியாதவாறு கட்டமைத்திருக்கிறார்கள். என்ன நடக்கவிருக்கிறது என்று யோசித்துப் பார்க்க முடிகிறதா? இது ஒரேயொரு அமைப்பின் செயல்பாடுகள் தான். இது போல் எத்தனை அமைப்புகள் என்னென்ன விதமாகச் செயல்படுகிறது என்று அந்தந்த ஊர்ப்பக்கம் போகும் போது சிரிச்சுட்டே தகவல் சேகரிங்க புரியும்.
கிருத்துவர்களுடைய ஆளுமை ஊடகங்களில் எவ்வளவு இருக்கிறது என்றும் மக்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. இவர்களுக்குச் சாதகமாகவும் ஹிந்துக்களுக்கு எதிராகவும் செய்திகள் போடுவது மட்டும் தான் நம் கண்களுக்குத் தெரிகிறது.. அதெல்லாம் 20 வருடங்களுக்கு முந்தைய செய்தி. இப்ப அவர்கள் லெவலே வேற…. எழுத எழுத வந்துட்டே இருக்கு. இத்துடன் கிருத்துவர்களின் பலத்திற்கான முன்னுரையை ( முன்னுரை மட்டும் தான் இது) நிறுத்திக் கொண்டு, அடுத்தப் பதிவில் முஸ்லிம்களின் பலம் என்ன என்று பார்ப்போம். அதன் பிறகு மோதியையும் அமித்ஷாவையும் நக்கலா கேள்வி கேட்டுக்குவோம்…
தொடரும்….

No comments:

Post a Comment