Monday 20 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லா துறையிலும் டுபாக்கூர்....
தமிழகத்தில் 'பத்திரிக்கையாளர்' என்ற போர்வையில் மோசடி பேர்வழிகள் உள்ளதாகவும், அவர்கள் களையெடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரித்து வந்த ஓய்வுபெற்ற முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவன்,
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளான்.
இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, மனுதாரர் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுதாரரின் அடையாள அட்டையை உடனே தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து, மனுதாரரின் அடையாள அட்டைகளை நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது.
அதில், சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், மனுதாரருக்கும் காதர் பாஷாக்கும் என்ன தொடர்பு என்றும் காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி மனுதாரரிடம் வந்தது என கேள்வி எழுப்பினர்.
இதனால் மனுதாரன் சரியாக சிக்கிக்கொண்ட நிலையில், பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி பேர்வழிகள் பலர் நடமாடுவ தாகவும், அவர்கள் பத்திரிகையின் பெயரை கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர், மஞ்சள் பத்திரிக்கை நடத்துபவர்களும் தங்களை பத்திரிக்கையாளர் என கூறி கொள்வது வருத்தத்துகுறியது என கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், பத்திரிக்கை சங்கங்கள் என்ற பெயரில் போலி நிருபர்கள் பல சங்கங்களை நிர்வகித்து வருவதாகவும், . இதுபோன்ற போலி பத்திரிக்கையாளர்களால் நேர்மையாக பணியாற்றும் உண்மை பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அரசின் சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்..
தற்காலங்களில், பத்திரிக்கைகளில் செய்தி என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்வதாகவும் குற்றம் சாட்டிய நீதிபதிகள், பத்திரிக்கைகளை பதிவு செய்ய குறைந்தபட்ச விற்பனை உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் பத்திரிக்கை துறையில் உள்ள கருப்பு ஆடுகளை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், உண்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தற்போது அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா? என காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், தகவல் தொலை தொடர்பு துறை செயலாளர் மற்றும் பத்திரிக்கையாளர் மன்றம், சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தை தாமாக இந்த வழக்கில் இணைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த மனுதாரரிடம், காதர் பாஷாவின் அடையாள எப்படி வந்தது என்பது குறித்தும், மனுதாரரின் பத்திரிக்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்..
தமிழகத்தில் எத்தனை பத்திரிக்கைகள் உள்ளது அதில் எத்தனை பேருக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது, எத்தனை பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
குறிப்பு; முதலில் இந்த நீதிபதிகளுக்கு நன்றி.இவ்வளவு முக்கியத்துவம்வாய்ந்த இந்த செய்தியை எந்த பத்திரிக்கையும் பதிவு செய்யவில்லை. பத்திரிக்கை துறையில் ஒன்று,இரண்டு கருப்பாடுகள் மட்டுமா உள்ளது..?. முழுவதுமே கருப்பாடுகளே நிறைந்துள்ளன.சிலை கடத்தில் வழக்கில் சம்ந்தப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.காதர்பாட்ஷா என்பனின் கைபாவையாக செயல் பட்டுள்ளான் இந்த பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் மறைந்துள்ளவன்.இவன்கள் தரும் செய்திகள் எப்படிப் பட்டதாக இருக்கும்..?ஐஜி.பொன்.மாணிக்கவேல் அவர்களை குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என நீதி மன்றத்தை நாடிய பத்திரிக்கையாளன் கையில்,சிலை கடத்தல் வழக்கில் சம்ந்தபட்டு பணியிடை நீக்கம் செய்யபட்டவனின் அடையாள அட்டை..என்ன கொடுமை இது..? இதுதான் நமது ஜனநாயகத்தின் நான்காவது தூண்..?தப்பித்தவறி ஒருவர் மனசாட்சிக்கு பயந்து நேர்மையான அதிகாரியாக தன் பணியை செய்தால் நமது நாட்டில் என்ன நடக்கும் என்பதற்கு பொன்.மாணிக்கவேல் அவர்களின் இன்றைய நிலையே உதாரணம்..
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment