Saturday 25 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!”*
*“என்னால் முடியும்”* என்று சொன்னாலும் *“என்னால் முடியாது”* என்று சொன்னாலும் இரண்டும் தனி நபர் நிஜங்கள். *இரண்டும் பலிக்கும்.*
*༺🌷༻*
நம் உள்ளே உள்ள நோக்கமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும் விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள். #மகரயாழ் *அனைத்து மதங்களும் அனைத்துக் கோட்பாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன.*
*༺🌷༻*
“என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது? “என்று கேட்கலாம். உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களையே ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?
*༺🌷༻*
நம் எண்ணம் எப்படி நம் செயல்பாட்டை மாற்றும் என்பதற்கு ஒரு கிரிக்கெட் உதாரணம் சொல்லலாம்.
*🧡👉தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆடுவதும்*
*💙👉ஜெயிக்கணும் என்ற எண்ணத்தில் ஆடுவதும் வேறு வேறு முடிவைத்தரும்!*
*༺🌷༻*
எல்லாருக்கும் வெற்றி வேண்டும். மகரயாழ் ஆனால் *உங்கள் மனதில் தோல்வியைத் தடுக்கும் வழி முறைகளை யோசிக்கிறீர்களா? அல்லது ஜெயிக்கும் உத்திகளை யோசிக்கிறீர்களா?*
*༺🌷༻*
உங்கள் படிப்பு, வேலை, காதல், திருமணம், தொழில், செல்வம், குடும்ப வாழ்க்கை என அனைத்தையும் உறுதிப்படுத்துவது உங்கள் எண்ணங்கள்.
*༺🌷༻*
*கவிஞர் கண்ணதாசன்* அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப் பாடல் வரியில் சொல்லிவிட்டார்:
*“பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!”*

No comments:

Post a Comment