Wednesday 22 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*🌸சாதிக்கும் மனிதர்களையும் சாய்த்து விடும் கவலை. மனிதனின் முதல் எதிரி கவலை*
மன்னர் ஒருநாள் நகர்வலம் வந்தார்.
அலங்கரித்த சில யானைகள்
முன்னால் செல்ல, பின்னால் பட்டத்து
யானை மீது அமர்ந்து மன்னர் சென்றார்.
ராஜவீதியில் செல்லும்போது, திடீரென
ஒரு பலசாலி இளைஞன், முதலில்
சென்ற யானையின் எதிரில் வந்து
நின்றான். அதன் தந்தத்தைப் பிடித்து
அப்படியே பின்னால் தள்ளினான்.
வலிமையாக அவன் தள்ளியதால்,
யானை அப்படியே சிறிது தூரம்
பின்னுக்குத் தள்ளப்பட்டது.
*༺🌷༻*
மன்னர் பெருமிதம் அடைந்தார்.
தனது மந்திரியின் பக்கம் திரும்பி,
''இந்த இளைஞன் எவ்வளவு
பலசாலியாக இருக்கிறான்! நம் நாட்டில்
இப்படிப்பட்ட வீரர்கள் இருக்கும் வரை
பயமில்லை '' என்றார்.
ஆனால், அந்த இளைஞன்
அடிக்கடி இப்படிச் செய்வதும், அதைத்
தொடர்ந்து மக்கள் மன்னரைப் பார்த்து
சிரிப்பதுமாக தொடர்ந்தது. அவன்
தனது யானையைப் பின்வாங்கச்
செய்வதன் மூலமாக தன்னோடு
மோதுகிறான் என்பது மன்னருக்குப்
புரிந்தது. வெளிப்படையாக
தண்டனை கொடுத்தால், #மகரயாழ் மக்கள்
கோபித்துக்கொள்வார்கள்.
என்ன செய்வது என்று தெரியாமல்,
தனது மந்திரியின் உதவியை நாடினார்.
*༺🌷༻*
''கவலைப்படாதீர்கள் மன்னா! நாளை இவன் இப்படிச் செய்ய முடியாது"
என்று உறுதி கொடுத்தார் மந்திரி.
அடுத்த நாள் வழக்கம் போல யானைப் படையுடன் மன்னர் நகர்வலம்
சென்றார். அந்த இளைஞன் வழக்கம் போல யானையைத் தள்ள
முயன்றான். அவனால் முடியவில்லை. அதற்குள் யானை அவனைக் கீழே
தள்ளிவிட்டது. தலைகுனிந்தபடி அவன் நகர்ந்தான்.
“என்ன செய்தீர்கள்?'' என மந்திரியிடம் கேட்டார் மன்னர்.
*༺🌷༻*
“அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தேன். பின்பு
அவனுடைய வீட்டுக்குச் சென்றேன். ஒரே பிள்ளை என்பதால் அவனைச்
செல்லமாக வளர்த்திருக்கிறார் அவன் அம்மா. அவன் வேலைக்கும்
போவதில்லை. “இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல்
இருப்பான். ஒழுங்காக சம்பாதித்து வந்தால்தான் சாப்பாடு என்று
சொல்லுங்கள். உங்கள் பிள்ளை பொறுப்பாகிவிடுவான்' என்றேன். மகரயாழ்
அவன் அம்மா உடனே அதைச் செய்திருக்கிறார். *'சம்பாதிப்பது எப்படி?*
என்ற கவலை வந்ததும், அந்த இளைஞன் பலமிழந்துவிட்டான். *எவ்வளவு பலசாலியையும் கவலை கரைத்துவிடும்''* என்றார் மந்திரி.
மன்னருக்குப் புரிந்தது.
*நீதி: கவலை இல்லாத மனிதனால் எதையும் சாதிக்க முடியும்.*

No comments:

Post a Comment